Connect with us

இந்தியா

Chennai Job Fair 2024: வேலை தேடுபவரா நீங்க..? இந்த வாய்ப்பை நழுவ விட்றாதீங்க… தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…

Published

on

வேலைவாய்ப்பு முகாம்

Loading

Chennai Job Fair 2024: வேலை தேடுபவரா நீங்க..? இந்த வாய்ப்பை நழுவ விட்றாதீங்க… தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…

வேலைவாய்ப்பு முகாம்

Advertisement

சென்னை மாதவரத்தில் அமைந்துள்ள புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் டிசம்பர் 14 சனிக்கிழமை காலை 8 மணி முதல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 20,000 மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்காக 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க உள்ளன.

இந்த வேலைவாய்ப்பு முகாமின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று பிரத்தியேக வேலைவாய்ப்புகள், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பணிபுரிய வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் உள்ள தனியார் நிறுவனங்களையும் வேலை தேடும் இளைஞர்களையும் ஒருங்கிணைக்க தமிழ்நாடு அரசு இந்த முயற்சி எடுத்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமின் மூலம் 20,000 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

டிகிரி, டிப்ளமோ அல்லது தொழிற்கல்வி படித்த 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாம் திட்டத்தில் பங்கேற்கலாம். வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் https://forms.gle/qsZbxrrSn547L9ep7 என்ற கூகுள் படிவத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் தனியார் வேலைவாய்ப்பு குறித்து அறிந்து கொள்ள https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு சென்னை, கிண்டியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அறிந்து கொள்ளலாம்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன