இலங்கை
உணவுப் பாதுகாப்புக்கு தனியான குழு அமைப்பு

உணவுப் பாதுகாப்புக்கு தனியான குழு அமைப்பு
நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தனியான குழுவொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது.
தேசிய உணவு மற்றும் போஷாக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் நியாயமான விலையில் உணவைப் பெற்றுக்கொடுத்தல் என்பன அரசாங்கத்தின் பிரதான பணிகள் என்ற அடிப்படையில், உணவுப் பாதுகாப்புக் குழுவை உருவாக்குவதற்கு ஜனாதிபதி அநுரவால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டுக்குள் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து உணவு வகைகளையும் உள்நாட்டில் உற்பத்தி செய்தல், குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு போதிய உணவு இருப்பை உறுதிப்படுத்தல், நாட்டிலுள்ள உணவுத் தொகை தொடர்பில் தகவல் கட்டமைப்பொன்றை நடத்திச் செல்லல், உணவு பாதுகாப்புக்கு தேவையான உற்பத்திகள், களஞ்சியம், விநியோகம் ஆகிய விடயங்களுக்காக தனியார் துறையின் பங்களிப்பையும் பெற்றுக்கொண்டு பயனுள்ள வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல் என்பனவே இந்த குழுவின் முதன்மைப் பணிகளாகும். (ச)