Connect with us

சினிமா

ஒழுங்கா முத்தம் கொடுக்கமாட்டியா!! படப்பிடிப்பில் நடிகையை தாக்கிய மோகன் பாபு..

Published

on

Loading

ஒழுங்கா முத்தம் கொடுக்கமாட்டியா!! படப்பிடிப்பில் நடிகையை தாக்கிய மோகன் பாபு..

டோலிவுட் சினிமா வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் விஷயமாக இருப்பது மோகன் பாபு குடும்ப பிரச்சனைதான். மோகன் பாபுவிற்கு அவரது 2வது மகன் மனோஜ் மோகனுக்கும் இடையே மோதல் ஏற்பட மகன் மீது புகாரளித்திருக்கிறார்.அதில் என் இரண்டாவது மகன் மனோஜ் சில சமூக விரோதிகளுடன் இணைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தொந்தரவு செய்ததாகவும் எனக்கும் எனது சொத்துக்கும் பாதுகாப்பு இல்லாததால் எனக்கு பயமாக இருக்கிறது என்று கூறியதால் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டிருக்கிறது.சூழல் இப்படியிருக்க, இதுதொடர்பாக மோகன் பாபு வீட்டிற்கு செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சென்றுள்ளனர். அப்போது அவர்களின் மைக்கை பிடுங்கி அவர்களை தாக்கமுற்பட்டுள்ளார் மோகன் பாபு. இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மோகன் பாபுவின் மற்றொரு விஷயம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.மோகன் பாபு தன் மகனை வைத்து ஒரு படத்தினை இயக்கியிருக்கிறார். அந்த படத்தில் நடிகை ஷில்பா சிவானந்த் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.ஒரு காட்சியில் ஷில்பா ஒழுங்காக தன் மகனுக்கு முத்தம் கொடுக்கவில்லை என்பதற்காக அவரையும் அவரது தாய் பர்வீனா சுல்தானையும் படப்பிடிப்பிலேயே தலைமுடியை பிடித்து தாக்க ஆரம்பித்திருக்கிறார்.இதனால் அதிர்ச்சியடைந்த ஷில்பா உடனடியாக ஜுபிளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதுதொடர்பான பழைய செய்தித்தாள் புகைப்படமும் சோசியல் மீடியாக்களில் பரவி ட்ரெண்ட்டாகியுள்ளது. அப்பவே மோகன் பாபு இவ்வளவு மோசமாக நடந்திருக்கிறாரே என்ற கருத்துக்களும் எழுந்து வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன