Connect with us

இந்தியா

கார்த்திகை தீப வழிபாடு..!! எத்தனை விளக்குகள் வைத்து வழிபட வேண்டும் தெரியுமா ?

Published

on

வாழ்வில் ஒளியேற்றும் கார்த்திகை தீப வழிபாடு

Loading

கார்த்திகை தீப வழிபாடு..!! எத்தனை விளக்குகள் வைத்து வழிபட வேண்டும் தெரியுமா ?

வாழ்வில் ஒளியேற்றும் கார்த்திகை தீப வழிபாடு

Advertisement

கார்த்திகை தீப வழிபாட்டின் மூலம் வாழ்வில்பல நன்மைகள் ஏற்படும் என புராணங்கள் கூறுகின்றன. கார்த்திகை மாதத்தில் வீடுகளிலும்கோவில்களிலும் பிரகாசமான வழிபாடு செய்வது காலம் காலமாக அறிவியல் ரீதியாகவும் மக்கள் நலனுக்காகவும் நடைபெற்று வரும் வைபவம் ஆகும். கார்த்திகை மாத பௌர்ணமி நாளை ஒட்டி, தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கார்த்திகை தீப வழிபாடு குறித்த தகவல்கள் சங்க நூல்களிலும் காணப்படுகின்றன. மாலை வேளைகளில் வீடுகளின் வெளிப்புறம், வீட்டின் முற்றம் என்று அனைத்து இடங்களிலும் அகல் விளக்குகள் ஏற்றி இவ்விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

கோவில்களில் தீப உற்சவம், சகஸ்ர தீப வைபவம் என்று இவ்விழா பக்தர்களால் விரிவுபடுத்தப்பட்டது. இல்லத்தில் 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் 27 தீபம் ஏற்றுவது சிறப்பான ஒன்றாக கூறப்படுகிறது. கார்த்திகை தீபத் திருநாளில் சொக்கப்பனைக்கு நெருப்பு வைத்து இறைவன் ஜோதிப் பிழம்பாக தோன்றிய நாளை நினைவு கூர்ந்து, அனைவரும் மகிழ்கின்றனர். கார்த்திகை தீபம் மூன்று தினங்களாக கொண்டாடப்படுகிறது.

முதல் நாள் தீபமான குமராலய தீபம் முருகப்பெருமான் கோவில்களில் வழிபடும் முறையாகும். கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தில் கொண்டாடப்படும் தீபத் திருநாள். சர்வாலய பெருமாள் கோவில்களில் ரோகிணி நட்சத்திரத்தில் வரும் நாளை விஷ்ணு ஆலயம் தீபமாக கொண்டாடுகிறது. கார்த்திகை தீபதிருநாளில் மிகவும் புகழ்பெற்ற திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது.

Advertisement

இல்லங்களில் தீபம் ஏற்றினால் இருள் அகன்று ஒளி மிகுந்த வாழ்க்கையை சிறப்பாக பெற முடியும் என்பது ஐதீகம். தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்று கூறப்படுகிறது.விளக்கேற்றிய பிறகு பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு முன்னர் அமர்ந்துகொண்டு, என்ற ஸ்லோகத்தை கூற வேண்டும். இந்த ஸ்லோகத்தை 108 முறை ஜபிப்பது சிறப்பு, இயலாதவர்கள் 3,9, 11 என்ற எண்ணிக்கையில் கூறலாம்.தீபத் திருநாளில் வழிபாட்டால், செல்வங்களும் கிடைக்கும். வீடு, மனை யோகம் கிடைக்கும், இழந்தவை அனைத்தும் மீண்டும் கிடைக்கும். அனைவரும் இன்னல்களில் இருந்து விடுபடுவார்கள் என்பது நம்பிக்கை.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன