Connect with us

இந்தியா

சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் மீட்பு – வெளியுறவுத்துறை அமைச்சகம்

Published

on

சிரியா

Loading

சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் மீட்பு – வெளியுறவுத்துறை அமைச்சகம்

சிரியா டமாஸ்கஸில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் ஆட்சியைக் கைப்பற்றியதாலும், ஜனாதிபதி பஷார் அல் அசாத் நாட்டை விட்டு வெளியேறியதாலும், ஜம்மு-காஷ்மீரில் இருந்து சென்ற யாத்ரீகர்கள் உட்பட 75 பேரை இந்தியா மீட்டது. அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக லெபனானுக்குச் சென்றதாகவும் மேலும் கிடைக்கக்கூடிய வணிக விமானங்கள் மூலம் இந்தியாவுக்குத் திரும்புவார்கள் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.”சிரியாவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதை அடுத்து”  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.”சைதா ஜைனப்பில் சிக்கியிருந்த ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 44 ‘யாத்ரீகர்கள்’ மற்றும் அங்கு இருந்த சில இந்திய பிரஜைகளும் மீட்கப்பட்டனர். அனைவரும் பாதுகாப்பாக லெபனானுக்குச் சென்றுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கக்கூடிய வணிக விமானங்கள் மூலம் இந்தியாவுக்குத் திரும்புவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.டமாஸ்கஸ் மற்றும் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகங்களால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த வெளியேற்றம், “பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மற்றும் சிரியாவில் உள்ள இந்திய பிரஜைகளின் கோரிக்கைகளை” ஏற்று நடைமுறைப் படுத்தப்பட்டது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆங்கிலத்தில் படிக்கவும்:India evacuates 75 of its citizens as rebels take over Syria”வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்கு இந்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது. சிரியாவில் மீதமுள்ள இந்தியர்கள் டமாஸ்கஸில் உள்ள இந்திய தூதரகத்துடன் அவர்களின் அவசர உதவி எண் +963 993385973 (வாட்ஸ்அப்பிலும்) மற்றும் மின்னஞ்சல் ஐடி (hoc.damascus@mea.gov.in) ஆகியவற்றில் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நிலைமையை அரசு தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கும்” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.Press release: Evacuation of Indian Nationals from Syria ⬇️https://t.co/7bESmhpKK2சிரியாவில் என்னதான் நடந்தது:நடந்து முடிந்த உள்நாட்டுப் போரால் 14 நாட்களில் அதிபர் ஆசாத்தின் அரசு கவிழ்ந்தது. நவம்பர் மாதக் கடைசியில், சிரிய எதிர்த்தரப்பைக் கொண்ட ஆயுதமேந்திய படைகள் அடுத்த சில நாட்களில் ஒன்றன்பின் ஒன்றாக முக்கிய நகரங்களில் நிலைகொள்ளத் தொடங்கியதால் அங்கு பதற்றம் நிலவியது. இதனால் அங்கு ஆட்சியில் இருந்த அரபு சோசலிச பாத் கட்சியான அசாத் அரசாங்கம் டிசம்பர் 8 வீழ்ந்தது.2000 முதல் நாட்டை ஆட்சி செய்து வரும் அசாத், 1971 முதல் அவரது தந்தை ஹஃபீஸ் அல்-அசாத்திடமிருந்து மரபுரிமையைப் பெற்றவர், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் சிரிய தலைநகருக்குள் அணிவகுத்துச் சென்றதால் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.சிரிய அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு அறிக்கையில், எதிர்த்தரப்பு போராளிகளின் ஒரு குழு, அவர்கள் டமாஸ்கஸை “விடுவித்து” விட்டதாகவும், “கொடுங்கோலன் அல்-அசாத்” ஐ தூக்கியெறிந்ததாகவும் தெரிவித்ததுடன், ஆட்சியின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து கைதிகளும் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தனர்.எச்.டி.எஸ்ஸின் அல்-ஜவ்லானி இதுவரை சிறுபான்மையினரின் அச்சத்தைத் தணிக்க முயன்றது. நவம்பர் 29 அன்று, அலெப்போவைக் கைப்பற்றிய பின்னர், “பொதுமக்களின் சொத்துக்களையும் உயிர்களையும் பாதுகாப்பதும், பாதுகாப்பை நிறுவுவதும், அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் அச்சத்தை அமைதிப்படுத்துவதும் முதல் முன்னுரிமை” என்று அவர் படையினரிடம் கூறினார்.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன