சினிமா
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கு இந்த பிரபல ஹீரோதான் வில்லனாம்!

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கு இந்த பிரபல ஹீரோதான் வில்லனாம்!
அமரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் புறனாநூறு என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக ஜெயம் ரவி தரப்பில் இருந்து 16 கோடி ரூபாய் வரையில் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும், 20 முதல் 25 நாட்கள் வரை கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் மேலதிகமாக சிவகார்த்திகேயன் தன்னை அடிப்பதுபோலவோ, அல்லது அசிங்கப்படுத்துவதுபோலவே காட்சிகள் இருக்க கூடாது எனவும் கன்டிஷன் போடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சுதா கொங்காராவ் இயக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.