Connect with us

சினிமா

சிவா நமக்கு வேணவே வேணாம் சார்.. அஜித்தின் முரட்டு ரசிகரால் கடுப்பான சிறுத்தை செய்த சம்பவம்

Published

on

Loading

சிவா நமக்கு வேணவே வேணாம் சார்.. அஜித்தின் முரட்டு ரசிகரால் கடுப்பான சிறுத்தை செய்த சம்பவம்

எப்போதுமே நடிப்பு, தன்னுடைய குடும்பம், பைக் பயணம், கார் ரேஸ் என இருந்து வருகிறார். ஆனால் ரசிகர்கள் அவர் மீது வெறித்தனமான அன்பை காட்டி வருகின்றனர்.

அது சில சமயங்களில் ஓவர் டோஸ் ஆக மாறிவிடுகிறது. அப்படித்தான் சமீப காலமாக கடவுளே அஜித்தேன்னு ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

Advertisement

இது சாதாரண சூழ்நிலையை கூட அசாதாரணமாக மாற்றியது. இதனால் அவர் இனி இது போல் சொல்ல வேண்டாம் என்று அறிக்கை விட்டிருந்தார்.

அதற்கு ரசிகர்கள் பலவிதமான கமெண்ட்களை கொடுத்து வந்தனர். அதில் அஜித்தின் முரட்டு ரசிகர் ஒருவர் கொடுத்த கமெண்ட் வைரலானது.

அதாவது சரி இனிமே உங்கள கடவுள்னு சொல்ல மாட்டோம். ஆனால் கூட படம் பண்ணலன்னு சொல்லுங்க சமாதானமா போலாம் என மீம்ஸ் ஒன்றைப் போட்டிருந்தார்.

Advertisement

இது படு வேகமாக ட்ரெண்டான நிலையில் சிறுத்தை சிவா அதற்கு ரியாக்ட் செய்திருக்கிறார். ஏற்கனவே கங்குவா படத்தின் தோல்வி அவரை சோகம் அடைய வைத்துள்ளது.

அதில் இந்த ரசிகர் வேறு தன் பங்குக்கு சீண்டி பார்த்து விட்டார். அதனால் சிறுத்தை சிவா தன்னை பின்தொடரும் அந்த ரசிகரை டிவிட்டர் தளத்தில் பிளாக் செய்து விட்டார்.

அதையும் அந்த ரசிகர் பகிர்ந்து உள்ளார். இப்படி சிறுத்தையை சீண்டி வாங்கி கட்டிய ரசிகரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன