விளையாட்டு
‘டூட்டி சந்தின் சாதனையை சமன் செய்வது அல்ல; முறியடிப்பதே எனது இலக்கு’: தமிழக வீராங்கனை அபிநயா ராஜராஜன்

‘டூட்டி சந்தின் சாதனையை சமன் செய்வது அல்ல; முறியடிப்பதே எனது இலக்கு’: தமிழக வீராங்கனை அபிநயா ராஜராஜன்
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள கல்லூத்து கிராமத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை அபிநயா ராஜராஜன். இவர் ஞாயிற்றுக்கிழமை ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த யூத் நேஷனல்ஸ் போட்டியில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு முறை வெள்ளிப் பதக்கம் வென்றவரும், இரண்டு முறை ஒலிம்பிக் வீராங்கனையுமான டூட்டி சந்தின் 18 வயதுக்குட்பட்ட 100 மீ சாதனையை சமன் செய்தார். அபிநயா லீக் சுற்றில் 100 மீ பந்தய தூரத்தை 11.62 வினாடிகளில் கடந்து டூட்டி சந்தின் பழமையான ஜூனியர் தேசிய அளவிலான சாதனையை சமன் செய்தார். இறுதிப் போட்டியில், அவர் தங்கம் வென்று அசத்தி இருந்தாலும், தனது முந்தைய பதிவை கடக்க முடியவில்லை.இந்நிலையில், டூட்டி சந்தின் சாதனையை சமன் செய்தது குறித்தும், தனது தடகள வாழ்க்கை குறித்தும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உடன் பகிர்ந்துள்ளார் பிநயா ராஜராஜன். 18 வயதான அபிநயா ராஜராஜன், கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு முன் தனது தடகள வாழ்க்கைப் பயணத்தை தொடங்கி இருக்கிறார். ஆனால் அவர் அனைத்து விவரங்களையும் சில நிமிடங்களுக்கு முன்பு நடந்தது போல் நினைவுபடுத்தி பேசியுள்ளார். “ஓடுவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் எனது பள்ளி சீருடை பாவாடையில் வெறுங்காலுடன் ஓடினேன். நான் 6 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது மண்டல அளவிலான போட்டி நடைபெற இருந்தது. நான் எனது ஆசிரியரிடம் எது குறைந்த தூரம் கொண்ட ஓட்டப்பந்தயம் என்று கேட்டேன். அது 100 மீ என்று கூறினார். அதனால் நான் ஸ்பிரிண்ட்ஸில் இறங்கினேன். இந்த போட்டியில் நான் பதிவு செய்ததற்குக் காரணம், கணித வகுப்புகளில் இருந்து தப்பிக்கத் தான்.” என்று அவர் கூறினார். மண்டல அளவிலான போட்டி முடிவுகள் அவரது ஆசிரியர்களை மட்டுமல்ல, அபிநயாவையும் ஆச்சரியப்படுத்தியது. பள்ளி சீருடையில் போட்டியிட்டு, பயிற்சி பெற்ற ஓட்டப்பந்தய வீரர்களை எளிதாக வென்றார். அதன்பிறகும் இது தொடர்ந்தது. அபிநயா ஸ்பிரிண்டிங் ஷூக்களுடன் களத்தில் குதித்தார். “நான் பயிற்சி இல்லாமல் விளையாட்டு வீராங்கனைகளை முந்தத் தொடங்கியபோது, நான் இயற்கையாகவே திறமையானவர் என்பதை உணர்ந்தேன். அப்போதுதான் நான் ஸ்பிரிண்டிங்கை இன்னும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன், ”என்று அவர் கூறினார்.அடுத்து என்ன செய்ய வேண்டும் என ஏற்கனவே அபிநயா அறிந்திருந்தார். அவர் 9 ஆம் வகுப்பு படிக்கும் போது தனது கல்லூத்து கிராமத்தில் உள்ள விளையாட்டுபயிற்சி அகாடமியில் சேர்ந்தார். இருப்பினும், அங்கு அவருக்கு வசதிகளின் பற்றாக்குறை விரைவில் அவரது முன்னேற்றத்தைத் தடுக்கத் தொடங்கியது. “எங்களிடம் செயற்கை ஓடும் பாதை இல்லை, அருகிலுள்ள ஸ்டேடியத்திற்கு செல்ல வேண்டும் என்றால், சுமார் 40 கிமீ தொலைவில் உள்ள திருநெல்வேலிக்கு செல்ல வேண்டும். அங்கு ஒவ்வொரு நாளும் பயணம் செய்வது என்பது ஒரு சாத்தியமான விருப்பமாக இல்லை, ”என்று அவர் கூறினார்.அப்போதுதான் அபிநயாவின் குடும்பத்தினர் அவர் மீது நம்பிக்கை வைத்து முக்கிய முடிவை எடுத்துள்ளனர். அவருக்கு சிறந்த பயிற்சி வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக அவர்கள் தங்கள் கிராம வீட்டை விட்டு திருநெல்வேலிக்கு குடிபெயர்ந்தனர். “எனது மகள் விளையாட்டு வீராங்கனையாக வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பினேன். அவர் அனைத்து போட்டிகளிலும் அரையிறுதியை அடைந்து பின்னர் வெளியேறுவார். அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கு, அவர் செயற்கை ஓடு பாதையில் தொடர்ந்து பயிற்சி பெற வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும், ”என்று கல் குவாரி வியாபாரம் செய்யும் அவரது தந்தை ராஜராஜன் கூறினார்.ஆரம்பத்தில், இது அவருக்கு பலனைத் தரவில்லை. விரும்பிய மேம்பாடுகள் வரவில்லை. ஆனால் அபிநயா தனது நம்பிக்கையை இழக்கவில்லை, அவரது மீண்டு வர கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆனது. பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, திருவனந்தபுரத்தில் உள்ள அவர்களின் மையத்தில் பயிற்சி பெறுவதற்கான இந்திய விளையாட்டு ஆணையத்தின் வாய்ப்பை அவர் ஏற்றுக்கொண்டார். அதிலிருந்து அவர் திரும்பிப் பார்க்கவில்லை. கடந்த ஆண்டு, யு-20 ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற 4×100 மீ ரிலே அணியில் அவர் இருந்தார்.புவனேஸ்வர் ஜூனியர் நேஷனல்கள் டூட்டி சந்தின் இளைஞர் சாதனையில் அபிநயாவின் கடைசி ஷாட் ஆகும், ஏனெனில் அவர் அடுத்த சீசனில் இருந்து யு-20 பிரிவில் போட்டியிட வேண்டும். “நான் குறி தவறவிட்டதால் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். சாதனையை சமன் செய்வது நல்லது, ஆனால் அதை முறியடித்து இருந்தால் இன்னும் நான் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன். நான் இறுதிப் போட்டியில் 11.52 வினாடிகளை இலக்காகக் கொண்டிருந்தேன், ஆனால் அதை இழுக்க முடியவில்லை, ”என்று அவர் ஏமாற்றத்துடன் கூறினார்.இருப்பினும், அவரது தந்தை அவரது திறனில் எந்த ஏமாற்றமும் காட்டவில்லை.“நான் டூட்டியைப் பற்றி அதிகம் படித்திருக்கிறேன். டூட்டியின் சாதனையை அவர் சமன் செய்திருப்பது மிகப்பெரிய சாதனையாகும். இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய ஓட்டப்பந்தய வீராங்கனையின் அடையாளத்தை அவர் பொருத்துவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை, ”என்று பெருமையுடன்தந்தை ராஜராஜன் கூறினார்.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“