Connect with us

சினிமா

தந்திரமாக காய் நகர்த்தும் நெல்சன், கலாநிதிக்கு விரித்த வலை.. ரஜினியை வைத்து உருட்டும் சன் பிக்சர்ஸ்

Published

on

Loading

தந்திரமாக காய் நகர்த்தும் நெல்சன், கலாநிதிக்கு விரித்த வலை.. ரஜினியை வைத்து உருட்டும் சன் பிக்சர்ஸ்

சன் பிக்சர்ஸ் மற்றும் ரஜினிகாந்த் காம்போ சொல்லிக்கும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறது. அதிலும் ரஜினிக்கு சில படங்கள் தொடர் தோல்வியை கொடுத்த நிலையில் நெல்சனையும் ரஜினியையும் நம்பி சன் பிக்சர்ஸ் தயாரித்த படம் தான் ஜெயிலர். இப்படம் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றியை கொடுத்து அதிக லாபத்தை ஈட்டி கொடுத்தது.

இதனால் கலாநிதி, நெல்சனை கௌரவிக்கும் விதமாக விலை மதிப்பு மிகுந்த கார் பரிசாக கொடுத்தார். அது மட்டும் இல்லாமல் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க வேண்டும் என்று நெல்சனிடம் வேண்டுகோள் வைத்து விட்டார். நெல்சனுக்கும் சின்ன சின்ன படங்கள் புது தயாரிப்பாளர்களிடம் கமிட் ஆகிவிட்டால் அதில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து அந்த படங்களை ரிலீஸ் பண்ணுவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்.

Advertisement

அதனால் சன் பிக்சர்ஸ் நம்பி படங்களை இயக்கினால் வசூலிலும் கல்லாகட்டி விடும், நம்மளுடைய கஜானாவும் நிரம்பி விடும் என்று தந்திரமாக காய் நகர்த்துவதற்கு ஓகே சொல்லிவிட்டார். ஆனால் அதில் ஒரு கண்டிஷனையும் போட்டுவிட்டார், அந்த வகையில் ஜெயிலர் இரண்டாம் பாகத்தை முடிப்பதற்கு கிட்டத்தட்ட 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஆகும் என்று சொல்லி அதுவரை என்னை தொந்தரவு பண்ணக்கூடாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

கலாநிதியும், நெல்சன் மற்றும் ரஜினி காம்போவில் அடுத்து ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்பதால் நெல்சன் கேட்டுக் கொண்ட படி சம்மதம் தெரிவித்துவிட்டார். ஏனென்றால் ஜெயிலர் முதல் பாகமே 650 கோடிக்கு மேல் வசூலை கொடுத்திருக்கிறது. அதே மாதிரி இரண்டாம் பாகத்திலும் ஆயிரம் கோடி வசூலை எடுத்திடலாம் என்பதற்காக ஓகே சொல்லிவிட்டார்.

இதற்கிடையில் வேட்டையன் படமும் ரஜினிக்கு வெற்றி கொடுத்திருக்கிறது, அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் கலாநிதி தயாரிப்பில் ரஜினி நடித்து வரும் கூலி படமும் மாபெரும் ஹிட் ஆகிவிடும். அந்த சமயத்தில் ஜெயிலர் 2 வந்தால் டபுள் மடங்காக லாபம் கிடைத்துவிடும். அந்த வகையில் சன் பிக்சர்ஸ் பொருத்தவரை அடுத்தடுத்து ரஜினியை வைத்து உருட்டினால் பெருத்த லாபத்தை சம்பாதித்து விடலாம்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன