Connect with us

சினிமா

நள்ளிரவில் 160 ரூபாயுடன் ஓடிவந்த ரஜினிகாந்த்!! சென்னையில் ஏற்பட்ட முதல் சம்பவம்..

Published

on

Loading

நள்ளிரவில் 160 ரூபாயுடன் ஓடிவந்த ரஜினிகாந்த்!! சென்னையில் ஏற்பட்ட முதல் சம்பவம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாளை டிசம்பர் 12 ஆம் தேதியோடு தன்னுடைய 74வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதற்காக பலரும் மிகவும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். ரஜினிகாந்த் பற்றி பல வீடியோக்கள் அவரை பற்றிய விஷயங்களை இணையத்தில் பகிர்ந்தும் வருகிறார்கள்.இன்று நள்ளிரவு 12 மணிக்கு கூலி படத்தின் அப்பேட் வரலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஜினி என்கிற சிவாஜிராவ் கெய்க்வாட், 10வது படத்துக்கொண்டிருக்கும் போது சென்னைக்கு வந்த விஷயம் குறித்த ஒரு தகவல் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.ரஜினி 10வது படிக்கும் போது அவரது அண்ணன் 160 ரூபாய் பள்ளிக்கட்டணத்தை கொடுத்துள்ளார். அப்போது ரஜினிக்கு படிப்பதில் ஆர்வம் இல்லை, ஏதாவது தொழில் செய்வதில்தான் ஆர்வம் இருந்துள்ளது. பணத்தை பள்ளியில் கட்டுவது வீண் என்று தனது அண்ணன் கொடுத்த 160 ரூபாயை வாங்கிக்கொண்டு இரவு உணவை குடும்பத்தினருடன் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு அனைவரும் தூங்கியப்பின் வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் ஓடிவந்துவிட்டார்.வந்தவர் நேராக பெங்களூர் ரயில் நிலையத்திற்கு வந்தபோது சென்னைக்கு செல்லும் ரயில் நின்று கொண்டிருந்துள்ளது. சென்னைக்கு டிக்கெட் வாங்கிய சிவாஜிராவ் ரயிலில் ஏறி சென்னை வந்துள்ளார். கடவுளை வேண்டிக்கொண்டு சென்னையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.அப்போது ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் பயணிகளிடம் சரிபார்த்துக்கொண்டிருந்தார். சிவாஜி ராவ் டிக்கெட்டினை அப்போது தேடும் போது தொலைந்துள்ளது. டிக்கெட் பரிசோதகரிடம் டிக்கெட் தொலைந்துவிட்டதாக கூறியிருக்கிறார். கொஞ்சம் ஓரமாக சிவாஜி ராவை நிற்கச்சொல்லியிருக்கிறார்.நீண்டநேரமாக நிற்பதை பார்த்து சுமைத்துக்கும் தொழிலாளர்கள் டிக்கெட் பரிசோதகரிடம் பேசி, சிவாஜி ராவை அதாவது ரஜினியை ரயில் நிலையத்தில் இருந்து வெளியேற உதவி செய்துள்ளனர். ரஜினி சென்னைக்கு வந்து இறங்கியதும் எதிர்கொண்ட முதல் அனுபவம் இதுதானாம்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன