Connect with us

சினிமா

மனோஜின் பிரம்மாண்ட பேலஸ் கனவுக்கு வைக்கப்பட்ட ஆப்பு? மீனாவுக்கு என்ட்ரியான புது எதிரி

Published

on

Loading

மனோஜின் பிரம்மாண்ட பேலஸ் கனவுக்கு வைக்கப்பட்ட ஆப்பு? மீனாவுக்கு என்ட்ரியான புது எதிரி

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மனோஜூம்  ரோகினியும் புதிதாக வாங்க இருக்கும் வீட்டை சுற்றிப் பார்த்து  ரொம்ப பிடித்ததாக உடனே அதனை பேசி முடிக்கின்றார்கள். இதனால் வீட்டை விற்பவர்கள்,  இந்த வீடு மொத்தமாக 5 கோடி.. ஆனால் மூன்று கோடிக்கு தருகின்றோம்.. முதலில் 50 லட்சம் அட்வான்ஸ் வேண்டும் என்று சொல்லுகின்றார்..அதற்கு மனோஜ் முதலில் 50 லட்சம் என்றால் கொஞ்சம் கஷ்டம்.. 30 லட்சம் தருகின்றோம் என்று சொல்ல, சரி மீதி பணத்தை ஆறு மாதத் தவணையில் தருமாறு சொல்லுகின்றார்கள். இதன் காரணத்தினால் வீட்டை விற்பவர்கள் ரொம்ப நல்லவர்களாக இருக்கின்றார்கள் என்று நினைத்து மனோஜூம் ரோகிணியும் சந்தோஷத்துடன் செல்கின்றார்கள். அவர்கள் சென்றதும் நாம நினைச்ச மாதிரி ஒரு முட்டாள் வந்து மாட்டி இருக்குது.. காசு கொடுத்ததும் நாம துபாய்க்கு செல்லுவோம் என்று அவர்கள் பிளான் போடுகின்றார்கள்.d_i_aஇன்னொரு பக்கம் மீனா மண்டபத்திற்கு டெக்ரேசன் பண்ணியதற்காக அவருக்கு ஏழாயிரம் ரூபாய் கொடுக்கின்றார்கள். இதன் போது வழமையாகவே மண்டபங்களில் திருமண ஆர்டர்களை எடுக்கும் பெண்மணி ஒருவர் புதிதாக என்ட்ரி கொடுத்து, தனக்கு ஏன் ஓட தரவில்லை, யாருக்கு புதிதாக ஓடர் கொடுத்தீர்கள் என்று மீனாவை பார்த்து வைக்கின்றார்.இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த மீனா அண்ணாமலைக்கு ஸ்வீட் கொடுத்து கிடைத்த வெற்றியை பற்றி பேசுகின்றார். முத்துவிடம் தான் வாங்கிய 7,000-த்தை கொடுத்து இது எல்லாம் உங்களால தான் என்று பெருமையாக பேசுகின்றார். ஆனாலும் இப்ப எல்லாம் உங்களவிட நான்தான் அதிகம் சம்பாதிக்கின்றேன். அதிகமாக உண்டியலில் போடுகின்றேன் என்று சொன்னதும் முத்துவின் முகம் ஒரு மாதிரி மாறிவிடுகின்றது. அதன் பின்பு மொட்டை மாடிக்குச் சென்று மீனா பேசியதை பற்றி யோசிக்கின்றார் முத்து. இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன