சினிமா
முதல் நாளில் அதிக வசூல் குவித்த இந்தியாவின் டாப் 10 படங்கள் இதோ..!
முதல் நாளில் அதிக வசூல் குவித்த இந்தியாவின் டாப் 10 படங்கள் இதோ..!
முன்பெல்லாம் திரையரங்குகளுக்கு சென்று பார்த்தால் தான் படம், ஆனால் இப்போதெல்லாம் வீட்டில் இருந்தே புது படங்களை குடும்பத்துடன் பார்த்து மகிழ எக்கச்சக்கமான ஓடிடி தளங்கள் வந்துவிட்டது. திரையரங்குகளில் வெளியாகும் புது படங்கள் 8 வாரங்களில் ஓடிடி தளத்தில் வெளியாகிவிடுகிறது. ஓடிடி ஆதிக்கம் செலுத்த தொடங்கினாலும் கூட திரையரங்கிற்கான மவுசு சற்றும் குறையவில்லை. முதல் நாள் பட ரிலீஸை கொண்டாடும் அனுபவம் திரையரங்கில் மட்டும் தான் கிடைக்கிறது, அதே போல பெரிய திரையில் தங்களுக்கு பிடித்த ஹீரோவின் படத்தை பார்க்கும் போது கிடைக்கும் உணர்வு வித்தியாசமானது. முன்பெல்லாம் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் மிக மிக குறைவாக இருந்தது, சமீப காலமாக பெரிய பட்ஜெட் படங்களின் வருகை அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது.
பெரிய பட்ஜெட் படங்களுக்கான மவுசும் மக்கள் மத்தியில் உச்சத்தில் இருந்து வருகிறது. முன்பெல்லாம் ரூ. 100 கோடி வசூல் செய்யும் படங்கள் இருந்ததில்லை, ஆனால் அவற்றை மாற்றியது பாகுபலி படம்தான். இந்திய சினிமாவில் வெளியான முதல் நாளே ரூ. 200 கோடிக்கும் மேல் வசூலை குவித்து ஒட்டுமொத்த சினிமா உலகையே திரும்பி பார்க்க வைத்து.
பாகுபலி படத்திற்கு பிறகு பெரிய பட்ஜெட் படங்களின் வரவும், 100 கோடி வசூல் படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அப்படி சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான “புஷ்பா 2” திரைப்படம் முதல் நாளே ரூ. 294 கோடி வசூலித்து பாகுபலியின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்தது. அப்படி இதுவரை இந்தியாவில் வெளியான படங்களில் முதல் நாளே அதிக வசூல் குவித்த டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ.
புஷ்பா 2 – ரூ. 294 கோடி
RRR – ரூ. 223 கோடி
பாகுபலி 2 – ரூ. 210 கோடி
கல்கி 2898 AD – ரூ. 191 கோடி
சலார் – ரூ. 178 கோடி
தேவரா – ரூ. 172 கோடி
கேஜிஎப் 2 – ரூ. 160 கோடி
லியோ – ரூ. 148 கோடி
ஆதிபுருஷ் – ரூ. 140 கோடி
சாஹோ – ரூ. 130 கோடி
முதல் நாளே வசூலை வாரிக் குவித்த படங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே ஒரு தமிழ் படம் லியோ. அதே போல், பட்டியலில் இடம் பிடித்துள்ள ஒரு கன்னட படம் கேஜிஎப் 2 . டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ள மற்ற 8 படங்களுமே தெலுங்கு படங்கள், அவற்றில் 5 நடிகர் பிரபாஸ் நடித்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
