Connect with us

சினிமா

விஜய் டிவி ஆடிஷன்ல இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.! நடிகை ஸ்ருதி ஓபன் டாக்

Published

on

Loading

விஜய் டிவி ஆடிஷன்ல இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.! நடிகை ஸ்ருதி ஓபன் டாக்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களுக்குள்ளையே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தற்போது இந்த சீரியலை இல்லத்தரிசிகள் மட்டும் இல்லாமல் இளம்வட்ட  ரசிகர்கள் வரை தொடர்ச்சியாக பார்த்து வருகின்றார்கள்.விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் காணப்படும் சீரியல்தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத வகையில் நாளாந்தம் மாறுபட்ட கதைகளத்துடன் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் நடிக்கும்  ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் காணப்படுகின்றது.முத்து – மீனா கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு இந்த சீரியல் நகர்ந்து வந்தாலும் அதில் மனோஜ் ரோகிணியின் கேரக்டர்கள் தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும்  கேரக்டர்களாக காணப்படுகின்றது. அதிலும் ரோகினி எப்போது வீட்டாரிடம் சிக்குவார் என்ற கேள்வி தொடர்ச்சியாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றது.எனினும் ரோகிணி செய்த தில்லாலங்கடி வேலைகளில் ஒன்று கூட இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இது ரசிகர்களை மிகவும் வெறுப்புக்கு உள்ளாகி வருகின்றது. தற்போது ரோகிணி தனது அம்மாவையும் மகனையும் சென்னைக்கு அழைத்து க்ரிஷை  யாரும் பார்க்காத வகையில் ஸ்கூல் ஒன்றில் சேர்த்து விடுகின்றார்.ஆனால் அந்த பாடசாலைக்கு தான் அண்ணாமலை வேலைக்கு போகின்றார். முத்துவும் அண்ணாமலையை விடுவதற்காக அங்கு செல்லுகின்றார். இதனை ரோகிணி பார்த்துவிட்டு இனிமேல் புதன்கிழமைகளில் க்ரிஷை . ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டாம் என்று சொல்லிச் செல்கின்றார்.இந்த சீரியலில் ரோகினியின் நண்பியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ருதி. அதாவது அவர் வித்யா என்ற கேரக்டரில் நடித்து வருகின்றார். இவர் ரோகிணியின் நண்பியாக இருந்த போதும் அடிக்கடி அவர் சொல்லும் பஞ்ச் டயலாக்குகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக காணப்படுகின்றன.இந்த நிலையில், நடிகை ஸ்ருதி வழங்கிய பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதன்படி அவர் கூறுகையில், தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு ஆடிஷனுக்காக போயிருந்தேன். அந்த சீரியலில் என்னை செலக்ட் பண்ணவில்லை. சரி அவ்வளவு தான்னு இருந்தப்போ எதிர்பார்க்காம இந்த வாய்ப்பு கிடைத்தது. சிறகடிக்க ஆசையில சும்மா ஒரு கேரக்டர் ரோலா தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அதற்குப் பிறகுதான் எனது கேரக்டருக்கான முக்கியத்துவம் தெரிந்தது என்று நடிகை ஸ்ருதி  தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன