இந்தியா
Margazhi Festival| “வந்தாச்சு மார்கழி” – ராமநாதசுவாமி கோவில் தனுர்மாத பூஜைக்கு ரெடியாகுங்க மக்களே…

Margazhi Festival| “வந்தாச்சு மார்கழி” – ராமநாதசுவாமி கோவில் தனுர்மாத பூஜைக்கு ரெடியாகுங்க மக்களே…
ராமநாதசுவாமி கோவிலில் மார்கழி மாதம் தனுர்மாத பூஜை விவரங்கள்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உலகப் பிரசித்தி பெற்று தீர்த்தம், மூர்த்தி, ஸ்தலம் என்ற முப்பெருமைகளையும் கொண்டு காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. இந்நிலையில், மார்கழி மாதம் திறக்க உள்ள நிலையில் தனுர்மாத நடை திறப்பு மற்றும் பூஜை காலங்கள் பற்றிய விவரத்தை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மார்கழி 1-ம் தேதி டிசம்பர் 16-ம் தேதி முதல் ஜனவரி 13-ம் தேதி வரை அதிகாலை 3:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 4:00 மணி முதல் 4:30 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்று, 5:00 மணிக்கு தனுர்மாத திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்று தேவாரம், திருவெம்பாவை ஓதுதல் செய்து திருவெம்பாவை நடைபெறும்.
காலை 6:00 மணிக்கு திருவனந்தல் பூஜை, 7:30 மணிக்கு விழா பூஜை, 10:00 மணிக்கு காலசந்தி பூஜை, பகல் 12:00 மணிக்கு உச்சிகால பூஜை, 1:00 மணிக்கு கோவில் நடை சாத்தி மீண்டும் 3:00 மணிக்கு திறக்கப்பட்டு 3:30 மணி வரை பொது தரிசனம், மாலை 6:00 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 8:00 மணிக்கு அர்த்தஜாம பூஜை, 8:30 மணிக்கு பள்ளியறை பூஜை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.