இந்தியா
திடீரென பள்ளிகளுக்கு அரை நாள் விடுப்பு… என்ன காரணம் தெரியுமா ?

திடீரென பள்ளிகளுக்கு அரை நாள் விடுப்பு… என்ன காரணம் தெரியுமா ?
பள்ளி விடுமுறை
தென்காசியில் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று (12.12.2024) மதியம் விடுமுறை என மாவட்ட கமல் கிஷோர் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (12.12.2024) பிற்பகல் நடைபெற இருந்த தேர்வுகள் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
தென்காசி மாவட்டத்தில் காலை வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் அறிவித்திருந்தார். இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் அதிக கன மழை பெய்யும் என்பதற்கான ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டிருந்த சூழலில் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி நெல்லை வழியாக அரபிகடல் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, ராமநாதபுரம், திண்டுக்கல், மயிலாடுதுறை, தஞ்சை, விழுப்புரம், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், காஞ்சிபுரம், அரியலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர், கரூர், வேலூர், தூத்துக்குடி, திருப்பத்தூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கபப்ட்டுள்ளது. மழை காரணமாக நெல்லையில் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்த சூழலில் தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.