சினிமா
அடடே இது வித்தியாசமா இருக்கே! 22 ஆண்டுகள் பூர்த்தி! தலையில் குரங்குடன் திர்ஷா…!

அடடே இது வித்தியாசமா இருக்கே! 22 ஆண்டுகள் பூர்த்தி! தலையில் குரங்குடன் திர்ஷா…!
நடிகை திர்ஷா தனது தனது இஸ்ராகிறேம் பக்கத்தில் ஒரு புகைப்படத்துடன், 22 ஆண்டுகள் நிறைவு என்று சொல்லி பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாவதுடன் ரசிகர்கள் பலரும் அந்த பதிவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா, லைலா உள்ளிட்டோர் நடித்த ‘மௌனம் பேசியதே’ திரைப்படம் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானவர் தான் திர்ஷா. இந்த படம் கடந்த 2002-ம் ஆண்டு வெளியானது. இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்த திரைப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதனை நினைவுபடுத்தும் விதமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் “22 வருடங்களாக சினிமா எனும் இந்த மாயாஜாலத்தில் அங்கம் வகித்ததற்காக பெருமைப்படுகிறேன்,அனைவருக்கும் நன்றி” என குறிப்பிட்டு தனது தலையில் குரங்குடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ‘சாமி’, ‘கில்லி’, ‘ஆறு’ உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்த திர்ஷா, இன்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்ததோடு சோலோவாகவும் சில திரைப்படங்களில் நடித்து உள்ளார். இப்பொது திரிஷாவின் மார்க்கெட் மிக உயரத்திலிருக்கிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்களும் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.