Connect with us

இலங்கை

அரசியல் கலாசாரத்தை காக்கும் அநுர ; மகிந்த தரப்பு கடும் குற்றச்சாட்டு

Published

on

Loading

அரசியல் கலாசாரத்தை காக்கும் அநுர ; மகிந்த தரப்பு கடும் குற்றச்சாட்டு

சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சபாநாயகரின் கல்வித் தகைமை தொடர்பான சர்ச்சையில் அமைதி காப்பது ஏன் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் மனோஜ் கமகே கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இந்த அரசியல் கலாசாரத்தையா நாட்டு மக்கள் எதிர்பார்த்தார்கள் என கேள்வி எழுப்பிய அவர், சபாநாயகர் பதவிக்கான கௌரவம் மலினப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.

Advertisement

கொழும்பில் இன்று(12.12.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு முழுமையாக குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிரிவினைவாத எண்ணக்கரு பகிரங்கமாக வெளிப்படுகின்ற நிலையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த மகிந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்தலின்போதும் மகிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது.

இவ்விடயம் குறித்து கேள்வியெழுப்பியபோது முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு எவ்விதத்திலும் குறைக்கப்படவில்லை என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்தது.

Advertisement

அத்தியாவசிய உணவு பொருட்கள் தட்டுப்பாடு தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்தியுள்ள பின்னணியில் ராஜபகசவின் பாதுகாப்பு தரப்பில் இருந்து 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நீக்கப்பட்டுள்ளமை முறையற்றதொரு செயற்பாடாகும்” என்றார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன