Connect with us

உலகம்

இந்த வருடத்தின் சிறந்த மனிதராக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு!

Published

on

Loading

இந்த வருடத்தின் சிறந்த மனிதராக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு!

அமெரிக்காவின் ஆங்கில வார இதழான டைம், ஒவ்வொரு வருடமும் உலகளாவிய ரீதியில் நடைபெற்ற நிகழ்வுகளிலும் செய்திகளிலும் அதிக செல்வாக்கு மிக்க நபரை தெரிவு செய்து டிசம்பர் மாத இதழில் வெளியிடும்.

இதற்காக சர்வதேச ரீதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மிகச் சிறந்த மனிதரை அந்த இதழ் தெரிவு செய்யும்.

Advertisement

அவ்வாறு தெரிவு செய்யப்படும் நபரின் புகைப்படம் டைம் இதழில் வெளிவரும்.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த மனிதராக அமெரிக்க ஜனாபதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் அதிக வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு டைம் இதழின் சிறந்த மனிதர் பட்டியலில் ட்ரம்ப் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன