Connect with us

இந்தியா

இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு… தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காதது ஏன்? – நாசர் கேள்வி!

Published

on

Loading

இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு… தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காதது ஏன்? – நாசர் கேள்வி!

”இஸ்லாமிய மக்களை அவதூறு செய்து பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியை பணிநீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திட மறுத்து, இஸ்லாமிய மக்களுக்கு மீண்டும் துரோகத்தை செய்துள்ளது அதிமுக. இதன் மூலம் பாஜகவுடன் கள்ளக்கூட்டணியை எடப்பாடி பழனிசாமி தொடர்வது அம்பலமாகி உள்ளது” என்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விஸ்வ ஹிந்து பரிஷத் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களை அவதூறாக பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமாரை பணிநீக்கம் செய்யக்கோரும் தீர்மானத்தை எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்துள்ளனர்.

Advertisement

“வெறுப்பு பேச்சு”, “வகுப்பு வேற்றுமையை தூண்டுதல்”, “அரசியலமைப்பை மீறுதல்” என்ற குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய அந்த தீர்மானத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்களான என்.ஆர்.இளங்கோ, கிரிராஜன், வில்சன், அப்துல்லா ஆகியோர் ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர்.

ஆனால் அதிமுகவை சேர்ந்த நான்கு மாநிலங்களவை உறுப்பினர் இருந்தும் ஒருவர் கூட இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக நின்று அந்த தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திடவில்லை.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிறுபான்மை மக்களின் உரிமைக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படும் போதெல்லாம் அவர்களுடன் தோளோடு தோள்நின்று ஆதரவாக செயல்பட்டு வரும் ஒரே இயக்கம் திமுக தான். மதப்பிரிவினைவாதிகளுடன் என்றும் கைகோர்க்க மாட்டோம் என அன்று முதல் இன்று வரை நெஞ்சுரத்தோடு களமாடி வருபவர் ஸ்டாலின்.

Advertisement

ஆனால், அதிமுகவோ ஒருபக்கம் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம் என கூறி மக்களை ஏமாற்றிக்கொண்டு மறுபக்கம் பாஜகவின் கள்ள உறவை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஏற்கனவே CAA வை ஆதரித்து வாக்களித்து சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்பட்ட அதிமுக, தற்போதும் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது என்பது இப்போது உள்ளங்கை நெல்லிக்கனியாய் அம்பலமாகி உள்ளது.

“இஸ்லாமியர்கள் கனிவு, சகிப்புத்தன்மை இல்லாத ஆபத்தானவர்கள்” என்று பிளவுப்படுத்தும் நோக்கம் கொண்ட சொற்களைப் பயன்படுத்தி பேசியிருந்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார்க்கு எதிராய் ஒரு கையெழுத்து போடக்கூட வக்கற்ற நிலையில் தான் அதிமுக உள்ளது.

Advertisement

“இஸ்லாமியருக்கு பாதுகாவலாக இருப்பது அதிமுக மட்டுமே!?” என வாய்கிழிய பேசும் எடப்பாடி பழனிசாமியின் பொய் வேடம் கலைந்து போய் உண்மை முகம் வெளிப்பட்டு விட்டது.

இஸ்லாமிய மக்களது முதுகில் குத்துவதையே வாடிக்கையாக கொண்ட அதிமுகவையும் அதன் தற்போதைய தளகர்த்தா பழனிச்சாமியின் துரோகத்தையும் இஸ்லாமிய மக்கள் என்றுமே மன்னிக்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை… நீதிமன்றத்துக்குள் வெடிகுண்டு வந்தது எப்படி?: நீதிபதிகள் கேள்வி!

Advertisement

அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்… நிம்மதி பெருமூச்சு விட்ட ரசிகர்கள்!

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன