இலங்கை
உயர்வடைந்து செல்லும் கோழி இறைச்சியின் விலை

உயர்வடைந்து செல்லும் கோழி இறைச்சியின் விலை
கோழி இறைச்சியின் விலை வேகமாக அதிகரித்து வருவதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், பண்டிகை காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில்இ அதிக இலாபம் பெறும் நோக்கில் சிலர் விலைகளை அதிகரித்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
சமீப நாட்களாக கோழிகளின் விலையை உயர்த்தும் முயற்சியில் பண்ணை உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு கிலோ கோழிக் கறியின் விலை ஆயிரத்து 500 ரூபாவை அண்மித்துள்ளதாக அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 14ஆம் திகதி அந்தந்த கோழிகளின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுld; அதே மாதம் 17ஆம் திகதி 20 ரூபாவினாலும் 18ஆம் திகதி 40 ரூபாவினாலும் 22ஆம் திகதி 20 ரூபாவினாலும் விலை அதிகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டிசெம்பர் மாதம் முதலாம் திகதி 10 ரூபாவினாலும், நான்காம் திகதி 20 ரூபாவினாலும், ஐந்தாம் திகதி 20 ரூபாவினாலும், 13ஆம் திகதி 20 ரூபாவினாலும் கோழியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் அசேல சம்பத் வலியுறுத்தியுள்ளார்.