Connect with us

இலங்கை

எலிக்காய்ச்சல் தொடர்பில் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை வெளியிட்டுள்ள தகவல்

Published

on

Loading

எலிக்காய்ச்சல் தொடர்பில் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை வெளியிட்டுள்ள தகவல்

யாழ். மாவட்டத்தில் அண்மையில் பரவும் எலிக்காய்ச்சல் தொடர்பில் உண்மைத்தன்மையை விளக்கி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை செய்திக்குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதில் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

Advertisement

பயப்பட வேண்டாம் எலிக்காய்ச்சலை ஆரம்பத்தில் கண்டறிந்து குணப்படுத்த முடியும். 

தடுப்பு மருந்தும் Doxycycline உள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கடந்த நவம்பர் மாதம் , எலிக்காய்ச்சல் என சந்தேகிகப்பட்டு சிகிச்சை பெற்ற நோயாளர்கள் எண்ணிக்கை 5 பேர், டிசம்பர் முதலாம் திகதியிலிருந்து டிசம்பர் 12 ஆம் திகதி இரவு 11 மணி வரை எலிக்காய்சல் என சந்தேகிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற, பெறுகின்ற நோயாளர்கள் 58 பேர்,

Advertisement

அதில் முதலாம் திகதி தொடக்கம் 9 ஆம் திகதி வரை 13 பேரும், 10, 11 ஆம் திகதிகளில் 29 பேரும் மேலும் நேற்றைய தினம் 12 ஆம் திகதி எலிக்காய்சல் என சந்தேகிகப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவர்கள் 16 பேரும் ஆகும்.

மேலும் இதில் நேற்று வரை தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்கள் 2 பேர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்கு அனுப்பபட்டவர் ஒருவரே ஆகும். 

 அத்துடன் நேற்று 12 ஆம் திகதி வரை வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்ற நோயாளிகள் கர்ப்பிணி பெண்கள் இருவர் உட்பட 28 பேர்.

Advertisement

இதுவரை இறந்தவர்கள் 7 பேரில் பலர் எலிக்காய்ச்சலால் இறந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . 

 பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் இறந்தவர் ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு இறந்தவர்கள் 5 பேர். 

 முல்லைத்தீவை வசிப்பிடமாக கொண்டவர் நாவற்குழியில் தற்காலிகமாக வசித்த போது நேரடியாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இறந்தவர் ஒருவர். 

Advertisement

 நேற்று வைத்தியசாலை ஊழியர்களுக்கும், OPD யிலும் எலிக்காய்சல் தடுப்பு மருந்து Doxycycline வழங்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை MOH, கரவெட்டி MOH, சாவகச்சேரி MOH, மருதங்கேணி MOH களின் நேரடி கண்காணிப்பின் மூலமும் தடுப்பு மருந்து வழங்கல் மூலமும் நிலமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு கொண்டிருக்கின்றது. 

 எலிக்காய்ச்சல் பரவலின் தீவிரத்தினை குறைக்க முன்னெச்சரிக்கை முன்ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு விட்டன.

Advertisement

தற்காலிக விடுதி திறக்கப்பட்டுள்ளது. தேவையான மருந்துகள் இருக்கின்றன.

மேலதிக மருந்துகள் MSD இலிருந்து எமக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 மேலதிகமாக தேவைப்படும் மருத்துவர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் சுகாதார ஊழியர்களுக்கான கடமை ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

வைத்தியசாலை வினைத்திறனாக இயங்கிய வண்ணம் உள்ளது. எனவே மக்கள் பயம் கொள்ள தேவையில்லை. எந்நேமும் மருத்துவமனையை அணுகலாம் என அறிவித்துள்ளனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன