சினிமா
ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணனை விவாகரத்து செய்யும் நடிகை சோஃபியா?

ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணனை விவாகரத்து செய்யும் நடிகை சோஃபியா?
இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டக்கத்தி படத்தில் எப்படி ஐஸ்வர்யா ராஜேஷ் சிறு ரோலில் நடித்தாரோ, அவரை போல் சிறு ரோலில் நடித்து நடிகையானவர் தான் நடிகை சோபியா.சிறுசிறு ரோலில் நடித்து வந்த சோபியா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் நடிப்பில் இருந்து விலகி ஒரு மகனை பெற்றெடுத்தார் சோபியா.இந்நிலையில், சோபியாவும் மணிகண்டனும் பிரியவுள்ளதாகவும் விரைவில் விவாகரத்து செய்யவுள்ளதாகவும் செய்திகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மகன் இருக்கும் நிலையில் இருவரும் பிரியவுள்ளது பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.