இந்தியா
கனமழை எதிரொலி… 2 மடங்காக விலை உயர்ந்த காய்கறிகள்…

கனமழை எதிரொலி… 2 மடங்காக விலை உயர்ந்த காய்கறிகள்…
காய்கறிகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரத்தை பார்க்கலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மழையின் காரணமாகவும், கார்த்திகை மாத சுப தினங்கள் வருவதாலும் காய்கறிகள் விலை சற்று அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் காய்கறிகள் விலை நிலவரத்தை கிலோ கணக்கில் தெரிந்து கொள்ளலாம் இந்த பதிவில்.
தக்காளி ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பீன்ஸ் 80 ரூபாய், பீட்ரூட் 45 ரூபாய், கத்தரிக்காய் ₹40, முட்டைக்கோஸ் 25 ரூபாய், கேரட் 50 ரூபாய், முருங்கைக்காய் 60, இஞ்சி 240 ரூபாய், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 25 ரூபாய், உருளைக்கிழங்கு 20 ரூபாய், பச்சை மிளகாய் 60, பூண்டு 400 முதல் 500 ரூபாய், முள்ளங்கி 40 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதாவது கார்த்திகை மாதம் சுப தினங்களையும் முன்னிட்டு மழையின் காரணமாகவும் காய்கறிகளின் விலை சற்று அதிகமாக இருக்கிறது என்றும் இனிவரும் காலங்களில் காய்கறி வரத்தைப் பொறுத்து குறைய வாய்ப்பிருக்கிறது என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.