Connect with us

பொழுதுபோக்கு

கால்ஷீட் கொடுக்காத சிவாஜி: அவரை வைத்து படம் இயக்க மறுத்த வாரிசு இயக்குனர்!

Published

on

Sivaji Gans

Loading

கால்ஷீட் கொடுக்காத சிவாஜி: அவரை வைத்து படம் இயக்க மறுத்த வாரிசு இயக்குனர்!

சிவாஜி கணேசன் நடிப்பில் ப வரிசை படங்களை இயக்கி வெற்றி கண்ட பீம்சிங் இறந்த பிறகு, சிவாஜியை வைத்து படம் இயக்க பீம்சிங் மகன் மறுத்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.தமிழ் சினிமாவில், பழம்பெறும் இயக்குனர்களில் முக்கியமானவர் பீம்சிங். இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சுவின் உறவினரான இவர், 1954-ம் ஆண்டு வெளியான அம்மையப்பன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து, ராஜா ராணி, பதிபக்தி ஆகிய படங்களை இயக்கினார். ஆனால் முதல் 3 படங்களுமே பீம்சிங்குக்கு தொல்வியை கொடுத்தது. ஆனாலும் அவருக்கான பட வாய்ப்பு வந்துகொண்டு இருந்தது.1959-ம் ஆண்டு வெளியான பாகபிரிவினை படத்தின் மூலம் சிவாஜி கணேசனுடன் இணைந்த இயக்குனர் பீம்சிங், அடுத்து, படிக்காத மேதை, பாவமன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும், பார்த்தால் பசிதீரும், படித்தால் மட்டும் போதுமா, பந்த பாசம், பார் மகளே பார் என சிவாஜி நடிப்பில் ப வரிசை படங்கயை இயக்கி வெற்றி கண்ட, பீம்சிங், 1978-ம் ஆண்டு மரணமடைந்தார்.  அதன்பிறகு அவரது மகன்கள் சினிமாவில் கால் பதிக்க தொடங்கினர்.தமிழ் சினிமாவில், படத்தொகுப்பாரளாக முத்திரை பதித்த பி.லெனின், சில படங்கயை இயக்கியும் இருக்கிறார். இவர் இயக்குனர் பீம்சிங்கின் மகன். அவரின் இன்னொரு மகனான ஹிருதயநாத், லெனின் இயக்கத்தில் சிவாஜி நடிப்பில் ஒரு படம் தயாரிக்கலாம் என்று நினைத்து, சுபமுகூர்த்த பத்திரிக்கை என்ற நாடகத்தை படமாக எடுக்க முடிவு செய்துள்ளார். இந்த நாடகத்தின் கதையை சிவாஜி கணேசனிடம் சொல்ல, அவரும் நாடகத்தை பார்ப்பதாக கூறியுள்ளார்.அதன்படி அந்த நாடகத்தை பார்த்து வியந்து பாராட்டிய, சிவாஜி கணேசன், இந்த கதையில் நான் நடிக்க முடிவு செய்துள்ளேன். இதில் நடித்தவர்கள் அளவுக்கு என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனாலும் நான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் அதன்பிறகு அவர் டேட் தருவதில் இழுதடித்த நிலையில், லெனினும், அவர் பெரிய ஹீரோ நான் புதுமுகத்தை வைத்து படம் இயக்குகிறேன். அதனால் அவரை வைத்து என்னால் இயக்க முடியாது என்று கூறியுள்ளார்.இப்படியே இருவரும் பிடி கொடுக்காமல் இருந்ததால், அந்த படம் அப்படியே நின்று போனது என்று பீம்சிங் மகன் ஹிருதயநாத் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் கூறியுள்ளார். “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன