இந்தியா
கிச்சன் கீர்த்தனா: சத்து மாவு சீடை!

கிச்சன் கீர்த்தனா: சத்து மாவு சீடை!
சத்து மாவு என்றால் அது, குழந்தைகளுக்கான உணவு என்றுதான் நினைக்கிறோம். அந்த சத்து மாவில் அனைவருக்கும் ஏற்ற சுவையான சீடையும் செய்து அசத்தலாம். அதற்கு இந்த ரெசிப்பி உதவும்.
சத்து மாவு – ஒரு கப்
பனை வெல்லம் அல்லது வெல்லம் – அரை கப்
தேங்காய்த் துருவல் – அரை கப்
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
உளுத்த மாவு – ஒரு டீஸ்பூன் (உளுத்தம்பருப்பை வறுத்து அரைத்தது)
எண்ணெய் – தேவையான அளவு
சத்து மாவை வெறும் வாணலியில் லேசாக வறுத்து எடுக்கவும். வெல்லத்தைத் தூளாக்கிச் சிறிதளவு தண்ணீர்விட்டு கொதிக்கவிடவும். வெல்லம் கரைந்து உருட்டு பாகு பதம் வந்ததும் இறக்கவும். இதனுடன் சத்து மாவு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், உளுத்த மாவு சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஆறிய பிறகு சிறிய சீடைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சீடைகளைப் போட்டுக் கருகவிடாமல், சிவக்கப் பொரித்து எடுக்கவும். ஆறியதும் கரகரப்பாக இருக்கும்.
சிறுதானியங்களை வறுத்து அரைத்தும் இந்தச் சீடை செய்யலாம்.