இலங்கை
சீனிப்பாணியைத் தயாரித்து தேன் என மூவர் கைது!

சீனிப்பாணியைத் தயாரித்து தேன் என மூவர் கைது!
சீனிப்பாணியைத் தயாரித்து தேன் என விற்பனை செய்து வந்த மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து பெருமளவான சீனிப்பாணியையும் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் வவுனியா பொதுச்சுகாதார பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் தேனைக் கொள்வனவு செய்யும் போது சரியான முறையில் உறுதிப்படுத்தி அவற்றை கொள்வனவு செய்யுமாறு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. (ப)