Connect with us

சினிமா

சூதுகவ்வும் பார்ட் 2 : ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா ?

Published

on

சூதுகவ்வும் பாகம் இரண்டு

Loading

சூதுகவ்வும் பார்ட் 2 : ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா ?

சூதுகவ்வும் பாகம் இரண்டு

Advertisement

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியாகி மெகாஹிட் அடித்த திரைப்படம் சூதுகவ்வும். இந்த படத்தில் அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இந்நிலையில் அதே தலைப்பை பயன்படுத்தி சூதுகவ்வும் பார்ட் 2 இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தின் முதல் பாகத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்தார். தற்போது இரண்டாம் பாகத்தை எஸ்.ஜே.அர்ஜுன் என்பவர் இயக்கியுள்ளார்.

முதலில் இந்த சூதுகவ்வும் இரண்டாம் பாகம் படத்தின் பஸ்ட் லுக் வெளியாகும் போது ரசிகள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை. ஆனால் சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியான போது படத்தின் முதல் பாகத்தில் உள்ள ஒரு சீன் இந்த பாகத்தில் இருப்பதால்சூதுகவ்வும் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தற்போது எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

இந்த இரண்டாம் பாகத்தில் சிவா, எம்.எஸ்.பாஸ்கர், ராதாரவி, கருணாகரன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். முதல் பாகம் எப்படி ஒரு டார்க் கமெடியாக உருவானோதோ அதே போல் இந்த படமும் டார்க் கமெடியாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். பொதுவாக தமிழ் சினிமாவில் பாகம் இரண்டு வந்தால் ரசிகர்கள் ஓரு டயலாக் வைத்து உள்ளார்கள். பர்னிச்சர் மேல கைய வச்ச முதல் டெட்பாடி நீதானு, ஏனென்றால் பார்ட் டூ படங்கள் தமிழ் சினிமாவில் இதுவரை சரியாக இருந்தது இல்லை. அந்த வரிசையில் இன்று (டிசம்பர் 13 ஆம் தேதி) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. சூதுகவ்வும் பாகம் இரண்டு எப்படி இருக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement

இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் கூறும்போது நலன் குமரசாமி​யிடம் பேசும்​போது, ஒரு கட்டத்​தில் ‘சூது கவ்வும் 2’ கதையை எழுத முடிய​வில்லை என்றும் சில ஆண்டுகள் கழித்து இதை உருவாக்கலாம் என்றும் சொன்​னார். அவர் பிசியான​தால் 2-ம் பாகத்​தின் கதை எப்படி இருக்க வேண்​டும் என்பதை சுருக்​க​மாகச் சொன்​னார். இதன் திரைக்​கதையை யாரால் எழுத முடியும் என்று நினைத்த​போது, அர்ஜுன் வந்தார். பிறகு ஒரு குழுவை உருவாக்கி எழுதினோம் என்று தெரிவித்தார்.

மேலும் முதல் பாகத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு வேற லெவலாக இருந்தது. விஜய் சேதுபதியின் திரைப்பயணத்தில் சூது கவ்வும் திரைப்படம் முக்கிய பங்காக கருதப்படுகிறது. இந்த இரண்டாம் பாகத்தில் நடித்து இருக்கும் சிவா கலகலப்பான நடிப்புக்கு பெயர்போனவர் அதனை சிறப்பாக செய்து இருக்கிறார். அவரது நடிப்புஇந்த படத்தின் மூலம் பேசப்படும். அதேபோல கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கதாநாயகியாக ஹரிஷா ஹஸ்டின் கலக்கி இருக்கிறார். இது அவருக்கு நல்லதொரு பெயரைரும். பெற்றுத்தரும் என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன