Connect with us

டி.வி

செய்தி வாசிப்பது உங்கள் சவுண்டு சௌந்தர்யா! போட்டியாளர்களை போட்டு தாக்கிய சம்பவம்…

Published

on

Loading

செய்தி வாசிப்பது உங்கள் சவுண்டு சௌந்தர்யா! போட்டியாளர்களை போட்டு தாக்கிய சம்பவம்…

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று சவுந்தர்யா தமிழில் செய்தி வாசிப்பது போன்ற கலக்கலான வீடியோ வைரலாகி வருகிறது. பிக் பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களை பற்றி புட்டு புட்டு வைத்து கலாய்த்து விடுகிறார். இவர் பேசும் தமிழையும், செய்தி வாசிக்கும் முறையும் பார்த்து போட்டியாளர்கள் சிரித்து கொண்டு இருக்கிறார்கள். அப்படி என்ன சொன்னார் சவுண்டு என்று பார்ப்போம் வாங்க. செய்தி வாசிக்க ஆரம்பிக்கும் முன்னரே ஒரு 2 மினிட்ஸ் எடுத்துக்கட்டுமா? என்று கேட்கிறார். போட்டியாளர்களும் ஓகே என்று சொன்ன பின்னர் சிறிது நேரத்தில் வணக்கம் செய்தி வாசிப்பது உங்கள் சவந்தர்யா என்று தொடங்கி ரயான் அவர்கள் இந்த ஷோவிற்றுக்கு வந்து அங்கும் இங்கும் இருந்து கடலை போட்டுகொண்டு இருக்கிறார். கடைசியில் கடலை தான் போட வரும் என்கிறார். d_i_aசட்டம் போட்டு கொண்டு எல்லா வாரமும் ஒரு கேப்டனாக உணர்கிறார் தீபக் சார். பிக் பாஸ் வீட்டில் நல்லவர் நல்லவராக இருக்க நடிக்கும் அருண் உழைப்பாளி உழைப்பாளி என்று உழைக்கும் விதம் கண்ணில் கண்ணீர் வர வைக்கிறது. மஞ்சூரி மஞ்சள் போடுவதை விட நமது தலையில் இடியை போடுவார் என்றுதான் நினைக்கிறேன். விஷால் அவர்கள் செய்த பொழுதுபோக்கு வேலைகள் யாருக்கு போய் சேர்ந்ததோ இல்லையோ கூடவே இருக்கும் தர்ஷிகாவுக்கு போய் சேர்ந்தது. ஒரே பாம் போட்டு இந்த ஷோவையே காலி செய்தார் அன்ஷித்தா, அவர் செய்ததை சாப்பிட்டதற்கு வருந்துகிறேன். கப் கழுவ வில்லை என்று கேட்டு கொண்டிருக்கும் முத்து போட்டியின் கடைசியில் கப் கழுவாமல் வைத்த அந்த நபரே கப்பை ஜெயிப்பார் கவனம் என்று அனைவரையும் கலாய்த்து தள்ளியுள்ளார். சவுண்டுனா சும்மாவா என்று சொல்லும் அளவுக்கு போட்டியாளர்களை வறுத்தெடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன