Connect with us

இந்தியா

திண்டுக்கல் மருத்துவமனையில் தீ விபத்து… லிப்ட்டுக்குள் போராடிய உயிர்கள் : என்ன நடந்தது?

Published

on

Loading

திண்டுக்கல் மருத்துவமனையில் தீ விபத்து… லிப்ட்டுக்குள் போராடிய உயிர்கள் : என்ன நடந்தது?

இன்று(டிசம்பர் 13) கார்த்திகை தீபம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் நேற்று இரவு திண்டுக்கல் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திண்டுக்கல் – திருச்சி சாலையில் நேருஜி மேம்பாலம் அருகில் டாக்டர் முரளிதரன் என்பவருக்கு சொந்தமான சிட்டி ஹாஸ்பிடல் செயல்பட்டு வருகிறது. நான்கு மாடிகளை கொண்ட இந்த மருத்துவமனையில் எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Advertisement

தரைதளத்தில் வரவேற்பு அறை, முதல் தளத்தில் தீவிர சிகிச்சை பிரிவு, இரண்டாம் தளத்தில் அறுவை சிகிச்சை பிரிவு, மூன்றாம் தளத்தில் உள்நோயாளிகளுக்கு சிகிச்சை, நான்காம் தளத்தில் மருத்துவமனை ஊழியர்கள் தங்கும் அறைகள் உள்ளன.

இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 9.30 மணி அளவில், மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஐசியு வார்டில் தீ விபத்து ஏற்பட்டதாக நேற்றிரவு தகவல் வெளியான நிலையில், தற்போது மருத்துவமனையின் ரிசப்ஷனில் மின்கசிவு ஏற்பட்டதும், அதன் காரணமாக இவ்விபத்து நடந்ததும் தெரியவந்துள்ளது.

Advertisement

ரிசப்ஷனில் மின் வயர் வழியாக தீ பரவி தரைதளத்தில் இருந்த பால்சீலிங், டிவி, கணினி, சுவிட்ச் பாக்ஸ், டிவி சேனல்கள் எல்லாம் பற்றி எரிந்தன. இதனால் ஏற்பட்ட கரும்புகை மளமளவென அடுத்தடுத்த தளங்களுக்கு பரவியது.

இந்த புகை மூட்டத்தில் சிக்கி நோயாளிகள் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அலறி அடித்துக்கொண்டு அங்கும் இங்கும் ஓடினர்

மருத்துவமனை ஊழியர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்ததால் அணைக்கமுடியவில்லை. உடனடியாக, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை மீட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

இந்த தீ விபத்து நடந்த சமயத்தில், கீழே தீ பற்றி எரிந்துகொண்டிருந்ததை அறியாமல் மாடியில் இருந்து 6 பேர் லிப்டில் இறங்கியிருக்கின்றனர். ஆனால் தீ விபத்தால் கரண்ட் ஆப் ஆனதால் அவர்களால் வெளியே வரமுடியாமல் லிப்ட்டுக்குள் மாட்டிக்கொண்டனர்.

உள்ளே இருந்தவர்கள், ‘லிப்ட்டை திறங்கள்’ என்று கதவைத் தட்டி கத்தியிருக்கிறார்கள். லிப்டில் இருந்த பட்டனை மீண்டும் மீண்டும் பிரஸ் செய்து இருக்கிறார்கள். ஆனால் எந்த பலனும் இல்லை.

ஒரு கட்டத்தில் லிப்ட் முழுவதும் புகை சூழ்ந்து, சுவாசிக்க முடியாமல் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.

Advertisement

சுமார் 2 மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் கடப்பாரை உள்ளிட்டவற்றை கொண்டு லிப்ட்டை உடைத்து உள்ளே இருந்த ஆறு பேரையும் மயக்க நிலையில் மீட்டனர்.

அவர்களை உடனடியாக வேறு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த ஆறு பேரும் மூன்று குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

Advertisement

திண்டுக்கல் மாவட்டம் லிங்கம்மாள் நகரை சேர்ந்த மாரியம்மாள் (50), அவரது மகன் மணி முருகன் (30), சீலயாம்பட்டி அம்பேத்கர் தெருவை சேர்ந்த சுருளி, அவரது மனைவி சுப்புலட்சுமி, கொரங்கநாதபுரத்தைச் சேர்ந்த ராஜசேகர் (36), அவரது ஆறு வயது மகள் உள்ளிட்டோர் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட நோயாளிகள் திண்டுக்கல்லில் உள்ள அரசு கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் உடல்நிலை மோசமடைந்ததால் ரஞ்சிதம், விஜயகுமார், பவித்ரா ஆகிய மூன்று பேர் மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது அரசு மருத்துவமனையில் 29 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி அதிமுக எம்எல்ஏ திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நலம் விசாரித்து ஆறுதல் கூறினர்.

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் முக்குலத்தோர், நாடார் மற்றும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் இந்த சமுதாயத்தினரும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனையின் மீது சீலப்பாடி போலீசார் (குற்ற எண்; 699/2024) வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்போது மருத்துவமனை மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

Advertisement

வே

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன