Connect with us

சினிமா

திரும்புகிற இடமெல்லாம் கன்னிவெடியாக 4 வருஷமாக சிக்கித் தவித்த சிம்பு.. வட்டி முதலுமாக கரந்த கொரனா குமார்

Published

on

Loading

திரும்புகிற இடமெல்லாம் கன்னிவெடியாக 4 வருஷமாக சிக்கித் தவித்த சிம்பு.. வட்டி முதலுமாக கரந்த கொரனா குமார்

லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆக சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்த சிம்பு சில வெற்றி படங்களை கொடுத்த நிலையில் டாப் இடத்திற்கு வந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு முன் அவரை தொடர்ந்து பிரச்சனைகளும் சர்ச்சைகளும் சூழ்ந்து விட்டதால் சில தொடர் தோல்விகளை சந்திக்கும் படி அமைந்துவிட்டது.

இருந்தாலும் சிம்புக்கு இருக்கும் ரசிகர்கள் தொடர் ஆதரவுகளை கொடுத்து வருவதால் அவ்வப்போது வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இதற்கிடையில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் 2021 ஆம் ஆண்டு கொரோனா குமார் என்ற படத்தில் கமிட் ஆகினார்.

Advertisement

இதற்காக சிம்புவுக்கு சம்பளம் 9 கோடி 50 லட்சம் ஆக பேசப்பட்டிருந்தது. இதில் அட்வான்ஸ் தொகையாக 4 கோடியே 50 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றிருந்தார். ஆனால் சம்பளம் வாங்கிய கையோடு படப்பிடிப்புக்கு சரியாக வராமல் படத்தை முடிக்காமல் இழுத்து அடித்தார். ஆனால் அதற்கு பதிலாக மற்ற படங்களில் கவனம் செலுத்தி தொடர்ந்து நடித்து வந்தார்.

இதனால் தயாரிப்பாளர், சிம்புவுக்கு நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் வழக்கு போடப்பட்டது. அந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டபோது ஒரு கோடி ரூபாய்கான உத்திரவாத பணத்தை சிம்பு டெபாசிட்டாக செலுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிம்புவும் அந்த ஒரு கோடி பணத்தை செலுத்தினர்.

இந்நிலையில் வேல்ஸ் நிறுவனம் மற்றும் சிம்புவுக்கு ஏற்பட்ட பஞ்சாயத்தை தீர்க்கும் வகையில் இருவரிடமும் பேசி சமரசம் செய்து விட்டார்கள். அதனால் சிம்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இரு தரப்பினரும் சமாதானம் ஆகிய நிலையில் சிம்பு செலுத்திய டெபாசிட் பணத்தை வட்டியுடன் சேர்த்து திரும்ப கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

Advertisement

அந்த கோரிக்கையின் படி நீதிபதி, சிம்பு செலுத்திய ஒரு கோடிக்கு வட்டியுடன் சேர்த்து 4 லட்சத்து 98 ஆயிரத்து 917 ரூபாய் திருப்பி தர வேண்டும் என்று உயர்நீத மன்ற தலைமை பதிவாளருக்கு உத்தரவு விட்டு இருக்கிறார்கள். அதன்படி கிட்டத்தட்ட நான்கு வருஷமாக இந்த பிரச்சனையில் சிக்கித் தவித்த சிம்புவுக்கு விடிவு காலம் பிறந்து விட்டது என்பதற்கு ஏற்ப கொரோனா குமார் படத்தின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி கிடைச்சாச்சு.

அதே சமயம் டெபாசிட்டாக செலுத்திய பணத்திற்கு வட்டி முதலுமாக சிம்பு திரும்ப பெற்று விட்டார். எங்கே திரும்பினாலும் கன்னிவெடியாக பல பிரச்சினைகளை சந்தித்து வந்த சிம்புவிற்கு இனிமேல் எந்த பிரச்சினையும் இல்லை என்பதற்கு ஏற்ப தீர்ப்பு கிடைத்து விட்டது. மேலும் தற்போது தக் லைஃப் மற்றும் சிம்புவின் 48வது படத்திலும் வெற்றியை கொடுக்க வேண்டும் என்று மும்மரமாக நடித்துக் கொண்டு வருகிறார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன