Connect with us

இலங்கை

“நாட்டில் தவறு செய்யும் எவரையும் எக்காரணம் கொண்டும் பாதுகாக்க எமது அரசாங்கம் தயாரில்லை”

Published

on

Loading

“நாட்டில் தவறு செய்யும் எவரையும் எக்காரணம் கொண்டும் பாதுகாக்க எமது அரசாங்கம் தயாரில்லை”

எந்தவொரு தரத்திலும் ஒருவர் தவறு செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இன்று (13) முற்பகல் அரசாங்க ஊடகப் பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்

“ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக, இந்நாட்டு மக்கள் வெவ்வேறு அரசாங்கங்களை உருவாக்கியுள்ளனர். வெவ்வேறு அரசாங்கங்கள் கவிழ்க்கப்பட்டன.”

“வரலாற்றில் முதன்முறையாக, இந்த நாட்டு மக்கள் எமக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இரண்டு சந்தர்ப்பங்களில் வழங்கிய வரலாற்று ஆணையினை இம்முறை நாங்கள் பெற்றுள்ளோம்.”

Advertisement

“தரமான மற்றும் நிலையான நாடு உருவாகும் என்ற நம்பிக்கையுடன் இந்த நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை உருவாக்கியுள்ளனர்..”

“எங்கள் அரசாங்கம் அந்த சிறப்பு நம்பிக்கையை ஒரு துளி கூட சேதப்படுத்த அனுமதிக்காது.”

“சுருக்கமாக கூறின், நாட்டில் தவறு செய்யும் எவரையும் எக்காரணம் கொண்டும் பாதுகாக்க எமது அரசாங்கம் தயாரில்லை. நாட்டில் மட்டுமல்ல எமது அரசாங்கத்திலும் எவரேனும் தவறு செய்தால் அந்த தவறுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்.

Advertisement

“சரியான நேரத்தில் இது தொடர்பாக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம்.”

7 தசாப்தங்களாக ஏமாற்றப்பட்ட மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தி இந்த நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு தமது அரசாங்கம் நிபந்தனையற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார மற்றும் அரச ஊடகப் பிரதானிகளின் பங்குபற்றுதலுடன் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன