Connect with us

இலங்கை

ரயில் சேவையை மேம்படுத்த விசேட கவனம்!

Published

on

Loading

ரயில் சேவையை மேம்படுத்த விசேட கவனம்!

ரயில் ஊடாக சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் பல புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ரயில்வே தலைமையகத்தில் ரயில்வே திணைக்கள அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், திணைக்களத்தில் நிலவும் ஊழியர் பற்றாக்குறைக்கு துரிதமான தீர்வுகளை வழங்குவதாக தெரிவித்தார்.

Advertisement

ரயில் தாமதம் மற்றும் ரயில் கோளாறுகளை தடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், ரயில் சேவையை அபிவிருத்தி செய்வதற்கு வரவு செலவு திட்ட முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்றையதினம்  கொழும்பு துறைமுகத்தில் விசேட கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்டதன் 

பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர், துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அடுத்த ஆண்டு ஜூன் 30ஆம் திகதிக்குள் தயார் செய்து முடிக்க வேண்டும் என்பதே அரசின் முக்கிய இலக்கு என தெரிவித்துள்ளார்.[ஒ]

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன