இந்தியா
Rasi Palan 2025: சொந்த வீட்டில் குடியேறும் காலம் வந்துவிட்டது… கனவு வீடு கட்டும் அதிர்ஷ்டக்கார ராசிகள் இவை…

Rasi Palan 2025: சொந்த வீட்டில் குடியேறும் காலம் வந்துவிட்டது… கனவு வீடு கட்டும் அதிர்ஷ்டக்கார ராசிகள் இவை…
மேஷம், ரிஷபம், மிதுனம்
ராசிக்காரர்களுக்கான 2025 ஆம் ஆண்டு பலன்
2025 ஆம் ஆண்டிற்கான ராசி பலன்களை திருநள்ளாறு அனுஷ்டாங்க சுத்த வாக்கிய கணிதப்படி புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் 40 வருடங்களுக்கு மேலாக ஜோதிட கணிப்பில் ஈடுபட்டு வரும் ஜோதிடர் சௌ. மாரிக் கண்ணன் கணித்து கூறியுள்ளார். மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய ராசிகளின் பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
எந்நாளும் தைரியத்தையும், ஊக்கத்தையும், முயற்சியும் விட்டு விடாத மேஷ ராசி அன்பர்களே.! 2025 உங்களுக்கு கை கொடுக்கும் நேரமாக அமைகிறது. பொருளாதார உயர்ந்தாலும் சமமான செலவு உண்டு என்பதால் தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். கடன்களை சமாளித்து விடுவீர்கள். ஆண்டின் முற்பகுதியில் சிறு சிறு மருத்துவ செலவுகள் உண்டு. ஆண்டியின் பிற்பகுதியில் வீடு மனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலர் பழைய வீட்டை புதுப்பிக்க உள்ளீர்கள். கல்வி துறையிலும், நீதித்துறையிலும் உள்ளவர்களுக்கு நற்காலமாக அமையும். தாயாருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும். தாய் வழி உறவில் மன சங்கடங்கள் ஏற்படும். தந்தை வழியில் சில ஆதாயங்கள் உண்டு. முடிந்தவரை இந்த 2025இல் மாதம் ஒரு முறையாவது முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யவும்.
கலை உணர்வும், ஆடம்பர வாழ்வில் நாட்டமும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே.! ஆண்டின் பிற்பகுதியில் உங்களுடைய பொருளாதார நிலை மேன்மை அடையும். தொழில்துறை சிறப்படையும். பதவியில் உயர்வு உண்டு. கடன் பிரச்சனை தீரும். நோய்வாய்ப்பட்டவர்கள் நலம் பெறுவார்கள் தந்தை வழி அல்லது பூர்வீக சொத்துக்களில் இருந்து வில்லங்கங்கள் தீர்க்கப்பட்டு உங்களுக்கு சாதகமாக அமையும். ஆண்டின் முற்பகுதியில் உங்கள் வாழ்க்கைத் துணைவரின் மூலம் ஆதாயம் கிடைக்கும். அவர்களுக்கு சுயதொழில் அமையவும் வாய்ப்பு உண்டு. குழந்தைகளுக்கு கல்வியும், வேலைவாய்ப்புகளிலும் முன்னேற்றம் உண்டு. கொடுத்த கடன்களும் திரும்பப் பெற வாய்ப்பு உள்ளது .குழந்தை இல்லாத பெண்களுக்கு மகப்பேறு வாய்ப்பு உள்ளது .தாயாருக்கு மருத்துவ செலவுகள் உண்டு. தந்தைக்கும் உயர்வு உண்டு, உடல் நலம் சீரடையும். நீங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமுடன் பேச வேண்டும் இல்லையெனில் சில வாய்ப்புகள் கைநழுவி போய்விடும் . 2025 ஆம் ஆண்டு மேலும் சிறப்பாக இருக்க பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள்.
எந்த ஒரு விஷயத்திலும் ஆழ்ந்து கணக்கிட்டு கவனமுடன் காரியங்கள் செய்திடும் மிதுன ராசி அன்பர்களே.! இந்த ஆண்டின் தொடக்கம் முதல் செப்டம்பர் வரை தாங்கள் சற்று தடுமாறுவீர்கள். இரட்டை மனநிலையை மாற்றி எதிலும் நிதானமாக செயல்பட்டால் செப்டம்பருக்கு பிறகு உங்களுக்கு வெற்றி காத்து உள்ளது. திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் அதிர்ஷ்ட காற்று வீச உள்ளது. வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பொருளாதாரம் உயரும். தொழில் அமைப்பு சீர்படும். உத்தியோகத்தில் உயர்வடைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
திருமணம் போன்ற சுப செலவுகள் ஏற்படும். வாழ்க்கை துணைவரின் பொருளாதாரத்தில் மேன்மை அடையும். பிள்ளைகளுக்கு இந்த ஆண்டு திருமண யோகம், வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. மருத்துவம் சார்ந்த தொழிலில் உள்ளோர் நலமடைவார்கள். உங்களுக்கு மேலும் நல்லது நடக்க மதுரை மீனாட்சி அம்மனின் வழிபாடு மிகுந்த நன்மையை தரும்.