இந்தியா
Rasi Palan 2025: பூர்வீக சொத்து சிக்கல் தீரும்… லாபத்தை சந்திக்கும் 3 ராசிகள் இவை…

Rasi Palan 2025: பூர்வீக சொத்து சிக்கல் தீரும்… லாபத்தை சந்திக்கும் 3 ராசிகள் இவை…
கடகம், சிம்மம், கன்னி
ராசிக்காரர்களுக்கான 2025 ஆம் ஆண்டு பலன்
வருகின்ற 2025 ஆம் ஆண்டிற்கான ராசி பலன்களை கணித்துக் கூறியுள்ளார் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஜோதிட கணிப்பாளர் கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ராஜதந்திரம் மிக்கவர்களும் எதையும் திட்டமிட்டு செயல்படுத்தி காட்டும் கடக ராசி அன்பர்களே.! இன்னும் அதிகமாக திட்டமிட்டு கவனமுடன் நடந்து கொள்ள வேண்டிய காலம் .ஏனெனில் நல்வாய்ப்புகள் உங்களுக்கு பூச்சாண்டி காட்டிக் கொண்டுள்ளது. ஏப்ரல் வரை சுமாராக இருந்த நிலை மாறி அதன் பின் தேவையற்ற விரயங்கள் ஏற்படும். உடல் நிலையில் கவனம் தேவை. வண்டி ,வாகனம் எச்சரிக்கை தேவை. சிலருக்கு தேவையை முன்னிட்டு வெளிநாட்டு பயணங்கள் ஏற்பட்டாலும் லாபம் இருக்காது. மன நிம்மதியும் இருக்காது .ஜூன் மாதத்திற்கு பிறகு தந்தையுடன் வேறுபாடு சிலருக்கு தாயை விட்டுப் பிரிந்தலும் ஏற்படும். தந்தையின் உடல் நலத்திலும் கவனம் தேவை. வாழ்க்கைத் துணைவரிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.
ஆண்டின் பிற்பகுதியில் ஒற்றுமை இல்லாத தம்பதிகளிடம் ஒற்றுமை உண்டாகும். முதல் நான்கு மாதங்கள் பிள்ளைகளை முன்னிட்டு செலவும் ஏற்படும். அக்டோபருக்கு மேல் வாழ்க்கை துணைவர் மற்றும் குழந்தைகளுக்கு முன்னேற்றம் உண்டு. 12 மாதங்களில் பௌர்ணமி அன்று சக்தி வழிபாடு செய்வதும் ஆஞ்சநேயர் வழிபாடு செய்வதும் நலம் தரும்.
எதிர்நீச்சல் போட்டு சாதிக்கும் திறன் படைத்த செயல்திறன் மிக்க சிம்மராசி அன்பர்களே.! மனம் திருப்திப்படும் வகையில் பொருளாதாரம் நிலையாக இருக்கும். தொழில் துறையில் இருந்த தடைகள் நீங்கி குறிப்பாக ஜூன் மாதத்திற்கு பின் லாபங்கள் அடைவீர்கள். அக்டோபருக்கு பின் சில சுப விரயங்கள் ஏற்படும். உடல் நலம் குறித்த செலவுகள் செய்யவும் வாய்ப்புண்டு. சொற்களை கவனமுடன் கையால வேண்டும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு அவர்களது பேச்சே பகையாகிவிடும். மே மாதத்திற்கு பிறகு ஆன்மீக சிந்தனைகள் அதிகமாகும். வாழ்க்கை துணியுடனும் பங்குதாரர்களுடனூம் கருத்து வேறுபாடு தோன்றும். வாழ்க்கைத் துணைவர் பண விஷயங்களில் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும்.
சிலர் வழக்குகளை சந்திப்பார்கள். பிள்ளைகள் கல்வி மற்றும் வேலையில் ஜூனுக்கு பிறகு சீரான முன்னேற்றம் ஏற்படும். ஆனால் கருத்து வேறுபாடு ஏற்படும். மே மாதத்திற்கு பிறகு வாழ்க்கை துணைவர் மூலம் புதிய தொழில் தொடங்குவீர்கள். ஏப்ரல் முடிய உடல் நலத்தில் கவனம் தேவை. தாய் அல்லது தந்தை இவர்களில் ஒருவருக்கு மருத்துவ சிகிச்சைகள் நடைபெற வாய்ப்புண்டு. பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சனைகள் ஆண்டு மாதத்தில் தீர்ந்துவிடும். ஜூன் மாதத்திற்கு பிறகு மாமாவின் வகையில் உயர்வுகளும், சுப செலவுகளும் உண்டு. பெருந்தன்மையின் காரணமாக யாரிடமும் ஏமாந்து விடாதீர்கள். கணக்குத் துறையில் உள்ளவர்களுக்கும், அரசியல் துறையில் உள்ளவர்களுக்கும் நல்ல காலம். சிவ ஆலயங்களில் சென்று வழிபட்டால் துன்பங்கள் குறையும்.
கணக்கிட்டு செலவு செய்யும் வித்தியா கர்வம் உள்ள கன்னி ராசி அன்பர்களே!
ஆண்டின் முற்பகுதியில் நீங்கள் நினைத்த காரியங்களை சாதித்துக் கொள்ளும் அருமையான வாய்ப்பு உங்களுக்கு உள்ளது .ஆண்டின் பிற்பகுதியில் சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணங்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் தேவையில்லாத செலவுகளும் அலைச்சலும் ஏற்படும் .ஆகையால் ஆன்மீகப் பயணங்கள் ஆறுதலாக இருக்கும். சிலருக்கு திருமணங்கள் திடீரென்று பிரச்சனையுடன் நடைபெறும். சகோதர வகை ஆதாயம் பெறுவார். இந்த ஆண்டு பூமி சம்பந்தமான லாபங்கள் உண்டு. ஆண்டின் நடுப்பகுதியில் வீடு, மனை ,வாகன யோகங்கள் கிடைக்க வாய்ப்புண்டு. பூர்வீக சொத்துகளில் உள்ள பிரச்சனைகள் தீரும். குழந்தைகள் கல்வி, வேலை வாய்ப்பு நன்றாக இருக்கும். ஜூனுக்கு பிறகு சிறு சிறு வைத்திய செலவுகள் ஏற்படும்.
வாழ்க்கைத் துணையின் மூலம் லாபங்களும், உயர்வுகளும் ஏற்படும். ஆண்டின் பிற்பகுதியில் உடல் அளவில் சிறு செலவுகள் ஏற்படும். அல்லது அவர்கள் கடன்கள் வாங்க நேரிடும். ஆண்டின் கடைசி நான்கு மாதங்கள் கவனமாக இருக்க வேண்டும். மாமாதி வகையில் மனக்கசப்புகள் ஏற்படும். தகப்பனார் வழியில் ஆதாயங்கள் உண்டு. அவர் பெயரில் உள்ள சொத்துகளில் வில்லங்கங்கள் ஏற்பட்டு விலகும். தாயார் வழியில் சில சொத்துகள் வந்து சேரும் .அதே சமயம் அக்டோபருக்கு பிறகு சிறு அறுவை சிகிச்சை மூலம், உடல் நலம் சீரடையும் சிலருக்கு உயர்கல்வி யோகம் உண்டு. பொறியல் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படும். மேலும் நன்மைகள் பெருக மதுரை மீனாட்சி அம்மனின் படம் வைத்து வழிபடவும், ஒரு முறை மதுரை சென்று ஆலய தரிசனம் செய்யவும்.