இந்தியா
School Holiday Announcement : தொடரும் கனமழை.. நாளை இந்த மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரி விடுமுறை … மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

School Holiday Announcement : தொடரும் கனமழை.. நாளை இந்த மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரி விடுமுறை … மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பள்ளி விடுமுறை
Heavy rain school Holiday Announcement: தென்காசி மாவட்டத்தில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டிருந்த சூழலில், தொடர் கன மழை பெய்து வருகிறது.
தென்காசி,செங்கோட்டை, இலஞ்சி, குற்றாலம், சங்கரன்கோவில் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 60 சென்டிமீட்டர் க்கு மேல் மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மதுரை சாலை, தென்காசி குற்றாலம் சாலை, யானை பாலம் கொஞ்சம் பல இடங்களில் தொடர் கனமலையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டிசம்பர் 13ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாளை (14.12.24) சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் எந்தவிதமான சிறப்பு வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தக்கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.