இந்தியா
school leave: நாளை(டிச.14) எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? – முழு விவரம் இதோ!

school leave: நாளை(டிச.14) எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? – முழு விவரம் இதோ!
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று அதே இடத்தில் நிலவி வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலு குறைந்து மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனால், இன்று டெல்டா மற்றும் தென் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி அரபிக்கடலை நோக்கி நகரக்கூடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்தப் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 16 ஆம் தேதி வரை இலங்கை – தமிழகத்தை அடையக்கூடும் என்றும், அடுத்த இரண்டு வாரத்திற்குப் புயல் உருவாக வாய்ப்பில்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும் நாளை எந்த சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது எனவும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அதேபோல், தொடர் மழை காரணமாக தேனி மாவட்டத்தில் நாளை (14ம் தேதி) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.