Connect with us

தொழில்நுட்பம்

Whatsapp’s update: பார்க்காத மெசேஜையும் இனி பார்க்க வைக்கலாம்…! வாட்ஸ்அப் தரும் புதிய அப்டேட்!

Published

on

Whatsapp's update: பார்க்காத மெசேஜையும் இனி பார்க்க வைக்கலாம்...! வாட்ஸ்அப் தரும் புதிய அப்டேட்!

Loading

Whatsapp’s update: பார்க்காத மெசேஜையும் இனி பார்க்க வைக்கலாம்…! வாட்ஸ்அப் தரும் புதிய அப்டேட்!

Advertisement

பொதுவாக வாட்ஸ் அப்பில் உங்களுக்கு புதிய மெசேஜோ, வாட்ஸ்அப் ஆடியோ அல்லது வீடியோ காலோ வந்தால் அதற்கான அறிவிப்பை வாட்ஸ்அப்பே உங்களுக்கு வழங்கும். ஒரு சிலருக்கு மெசேஜ்கள் குவியும். இதுபோன்ற நேரங்களில் தனக்கு நெருக்கமான அல்லது சில முக்கிய மெசேஜ்களை கூட பார்க்க முடியாமல் போகலாம். இதனை போக்கும்விதமாக வாட்ஸ்அப், தனது பயனர்களுக்கு ஒரு புதிய அப்டேட் ஒன்றை வழங்க இருக்கிறது.

ஏற்கனவே, பீட்டா பயனர்களுடன் இந்த அம்சத்தை வாட்ஸ்அப் சோதித்து வரும்நிலையில், விரைவில் அனைவரின் பயன்பாட்டுக்கும் இந்த அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப் முன்னதாக ஸ்டேட்டஸ் அப்டேட் மூலம் தனது யூசர்களுக்கு இந்த நினைவூட்டல் அம்சத்தை வழங்கி வந்த நிலையில் தற்போது மெசேஜ் பக்கத்திலேயே இந்த அம்சத்தை கொண்டுவர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

சமீபத்திய அம்சங்களைப் போல் இல்லாமல், நமது விருப்பத்திற்கு ஏற்ப இந்த அம்சத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் வசதியை வாட்ஸ்அப் வழங்க இருக்கிறது. நோட்டிபிகேஷன் செட்டிங்ஸில் இதனை தேர்வு செய்வதன் மூலம் இந்த நினைவூட்டல்கள் செயல்படும். எனினும், இந்த அம்சத்தை உடனடியாக முயற்சி செய்ய, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.24.25.29 தேவைப்படும்.

வாட்ஸ்அப்பின் பீட்டா வெர்ஷன் உங்களிடம் இருக்கும் பட்சத்தில், செட்டிங்ஸ் – நோட்டிபிகேஷன் – ரிமைண்டர்ஸ் என்பதை தேர்வு செய்து இதனை பயன்படுத்திப் பார்க்கலாம்.

இந்த நினைவூட்டல் விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்து இயக்கியதும், நீங்கள் பார்க்காத அல்லது படிக்காத மெசேஜ்கள் பற்றி வாட்ஸ்அப் தொடர்ந்து உங்களுக்கு எச்சரிக்கை செய்யும் அல்லது நினைவூட்டல்களை அனுப்பும்.

Advertisement

WaBetaInfoஇன் அம்சத்தைப் பற்றிய விவரங்களின்படி, நீங்கள் வழக்கமாக மெசேஜ் அனுப்பும் நபர் அல்லது தொடர்பு கொள்பவர்களுக்கு மட்டுமே வாட்ஸ்அப் இந்த அம்சத்தை வழங்குவதாகக் கூறுகிறது. மேலும், பீட்டா பதிப்பில் உள்ள அம்சத்தை எங்களால் சரிபார்க்க முடிந்தது. இதன் அதிகாரப்பூர்வ வெளியீடு விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம், அதன் பீட்டா பதிப்பில் மக்களின் பயன்பாட்டுக்கு வெளியிடப்படாத பல அம்சங்களை வழங்குகிறது. மேலும் இந்த புதிய அம்சங்களை பயன்படுத்த அல்லது சோதித்துப் பார்க்க வாட்ஸ்அப் பீட்டா அம்சத்தில் சேர வேண்டும். இதற்காக மக்கள் இந்த திட்டத்தில் பதிவு செய்யலாம்.

Advertisement

மெசேஜ் பயன்பாடு குறித்த இது போன்ற ஒரு அம்சத்தைப் பற்றி, சமீபத்தில் வாட்ஸ்அப் அனைவருக்கும் தெரியும்படி பொதுவாக உறுதிப்படுத்தியது. ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு அதிகாரப்பூர்வமாக கிடைக்கும் புதிய டைப்பிங் இன்டிகேட்டரையும் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டைப்பிங் இன்டிகேட்டர் வாட்ஸ்அப் ஸ்கிரீனின் வலது பக்கத்தில் உள்ள சேட் பகுதியில் ஒரு பபுள் வடிவில் இடம்பெற்றிருக்கிறது. இது உங்களுக்கு மெசேஜ் வந்தடைவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட நபர் டைப் செய்யும்போது மூன்று புள்ளிகள் நகர்வதை நீங்கள் காண முடியும். இந்த அம்சத்தை நீங்கள் செயல்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை, இது இயல்பாகவே செயல்படத் தொடங்கும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன