இலங்கை
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (14) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியது.
தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கூட்டத்தில் செயலாளர் ப.சத்தியலிங்கம், சி.வி.கே.சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், இரா.சாணக்கியன், து.ரவிகரன், க.கோடீஸ்வரன், ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சீ.யோகேஸ்வரன், சி.சிவமோகன், சாந்தி சிறிஸ் கந்தராஜா, த.கலையரசன், ஞா.சிறிநேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் முதல் முறையாக மத்திய குழு கூடியுள்ளது.
இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.