இலங்கை
கொழும்பில் பரபரப்பு ; துப்பாக்கிச் சூட்டில் பெண் பெண் காயம்

கொழும்பில் பரபரப்பு ; துப்பாக்கிச் சூட்டில் பெண் பெண் காயம்
கொழும்பு, மாளிகாகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று (14) பிற்பகல் இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவத்தால் பரப்ரப்பு ஏற்பட்டுள்ளது.
கொழும்பு, மாளிகாகந்த பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.