பொழுதுபோக்கு
சிறையில் இருந்து திரும்பிய அல்லு அர்ஜூன்: கட்டிபிடித்து கண்ணீர்விட்ட மனைவி சினேகா: வைரல் வீடியோ!

சிறையில் இருந்து திரும்பிய அல்லு அர்ஜூன்: கட்டிபிடித்து கண்ணீர்விட்ட மனைவி சினேகா: வைரல் வீடியோ!
கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகை உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட புஷ்பா 2 நடிகர் அல்லு அர்ஜூன் ஒருநாள் சிறையில் இருந்துவிட்டு திரும்பிய நிலையில், அவரது. மனைவி சினேகா ரெட்டி அவரை அரவணைப்புடன் வரவேற்றுள்ளார்.Read In English: Allu Arjun’s wife Sneha breaks down as he returns home after spending night in jail; Pushpa 2 star races to hug his children. Watch videoதெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்து, உலகளவில் ரூ1000 கோடி வசூலித்துள்ளது. இந்த படம் வெளியான டிசம்பர் 5-ந் தேதி, அல்லு அர்ஜூன் ஒரு தியேட்டரில் படம் பார்க்க வந்தபோது, அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் குவிந்தது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பான வழக்கு பதிவு செய்த ஹைதராபாத் போலீசார் நேற்று நடிகர் அல்லு அர்ஜூனை கைது செய்த நிலையில், அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. ஆனால், அடுத்த நாளே அவருக்கு ஐகோர்ட் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதனிடையே ஒருநாள் சஞ்சல்குடா சிறையில் இருந்துவிட்டு வீடு திரும்பிய அல்லு அர்ஜூனை அவரது மனைவி சினேகா ரெட்டி அரவணைப்புடன் வரவேற்றார்.அல்லு அர்ஜூனின் சகோதரர் அல்லு சிரிஷ் மற்றும் அவரது குழந்தைகள் அயன் மற்றும் அர்ஹா ஆகியோர் வரவேற்றனர். இது குறித்து வெளியாக ஒரு வீடியோவில், அல்லு அர்ஜுனுக்காக அவரது மனைவி சினேகா தனது பிள்ளைகளுடன் அவர்களின் வீட்டிற்கு வெளியே காத்திருந்தனர். வீடு திரும்பிய அர்ஜூன், உணர்ச்சிவசப்பட்ட தருணத்தில் தன் குடும்பத்தை நோக்கி ஓடி வந்துள்ளார். அப்போது மனைவியும் அவரும் ஒருவரையொருவர் இறுக்கமாக அணைத்து அன்பை பரிமாறிக்கொண்ட நிலையில், சினேகா ரெட்டி கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.நேற்று (டிசம்பர் 14) காவல்துறையால் கைது செய்யப்பட்டபோது, சினேகாவின் கன்னத்தில் முத்தமிட்டு சென்ற அல்லு அர்ஜூன், இன்று காலை சிறையில் இருந்து வெளிவந்த பிறகு அர்ஜுனும் முதன்முறையாக செய்தியாளர்களிடம் பேசினார். அவர், “நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன், எந்த விசாரணைக்கும் ஒத்துழைப்பேன். இறந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு மீண்டும் ஒருமுறை இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்று கூறியுள்ளார்.#AlluArjun #AlluArjunArrest #WeStandWithAlluArjun #AlluArjunArrestedNews pic.twitter.com/5WpICIv7fRதெலுங்கானா உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய போதிலும், நேற்று இரவு வரை ஜாமீன் உத்தரவின் நகல் அதிகாரிகளுக்கு கிடைக்காததால், அவர் ஒருநாள் இரவை சிறையில் கழிக்க வேண்டியிருந்தது. அவரது வழக்கறிஞர் அசோக் ரெட்டி சிறையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அல்லு அர்ஜூன் விடுவிக்கப்பட்டதாக கூறினார். ஆனால் அடுத்து சில மணி நேரங்களில் உயர்நீதிமன்ற உத்தரவு நகலை பெற்றும் சிறை அதிகாரிகள் அவரை விடுவிக்கவில்லை என்றும் கூறினார்.“குற்றம் சாட்டப்பட்டவர்களை ஏன் விடுவிக்கவில்லை என்று அரசாங்கத்திடமும் காவல் துறையிடமும் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும். உயர் நீதிமன்ற உத்தரவு மிகவும் குறிப்பிட்டது. நீங்கள் (சிறை அதிகாரிகள்) உத்தரவு பெற்றவுடன், அவரை விடுவிக்க வேண்டும். தெளிவான உத்தரவு இருந்தும், வெளியிடவில்லை, இதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும். இது ஒரு சட்ட விரோத காவலாகும் இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம், என்று கூறியிருந்தார்.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“