Connect with us

உலகம்

3 இந்திய மாணவர்கள் படுகொலை; கனடாவில் அதிகரிக்கும் சம்பவங்கள்!

Published

on

Loading

3 இந்திய மாணவர்கள் படுகொலை; கனடாவில் அதிகரிக்கும் சம்பவங்கள்!


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 14/12/2024 | Edited on 14/12/2024

                                                      வெளியுறவு அமைச்சகம்

இந்தியாவால் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவராக இருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது படுகொலைக்கு, இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்க, அதற்கு இந்தியா மறுத்து கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இதனால், இந்தியா – கனடா உறவு இடையே தூதரக ரீதியாக விரிசல் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கடந்த வாரத்தில் மட்டும் 3 இந்திய மாணவர்கள் கனடாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஒன்றிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது, “கடந்த வாரத்தில் கனடாசில் மூன்று இந்திய மாணவர்கள் கொல்லப்பட்ட துர்திர்ஷ்டவசமான சம்பவம்  நிகழ்ந்துள்ளது. கனடாவில் உள்ள நமது குடிமக்களைத் தாக்கிய இந்த பயங்கரமான துயரங்களால் நாங்கள் வருத்தப்படுகிறோம்.

உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர்களுடன், இந்திய தூதரகங்கள் தொடர்பில் இருக்கின்றன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். கனடாவில் அதிகரித்து வரும் வெறுப்புக் குற்றங்கள் மற்றும் குற்றவியல் வன்முறைகள் போன்றவற்றால், மோசமான பாதுகாப்புச் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, நமது இந்தியர்களுக்கும், இந்திய மாணவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், விழிப்புடன் இருக்குமாறும் ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளோம்” என்று கூறினார். 

Advertisement

கடந்த 6ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குராஸ் சிங் என்ற இந்திய மாணவரை, கனடாவில் அவரது அறை தோழர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது. 

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • “மனதில் தோன்றும் கருத்தை வெளிப்படையாக பேசுபவர்” – முத்தரசன் இரங்கல்

  • “அவரது அர்ப்பணிப்பு என்றென்றும் உத்வேகமாக இருக்கும்” – ராகுல் காந்தி எம்.பி. இரங்கல்!

  • 3 இந்திய மாணவர்கள் படுகொலை; கனடாவில் அதிகரிக்கும் சம்பவங்கள்!

  • ‘ஒரே நாடு ஒரே தேர்தல்; பயன்படுத்த நினைக்கும் ஒன்றிய அரசு’ – சிக்கல்களை விவரித்த புதுமடம் ஹலீம்

  • “மிகுந்த மன வேதனை அடைந்தேன்” – த.வெ.க. தலைவர் விஜய் இரங்கல்

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன