Connect with us

டி.வி

69 நாட்களில் முடிவடைந்த சத்யாவின் பயணம்..! வெளியான ஷாக் நியூஸ்

Published

on

Loading

69 நாட்களில் முடிவடைந்த சத்யாவின் பயணம்..! வெளியான ஷாக் நியூஸ்

பிக்பாஸ் சீசன் 8 தற்போது பத்தாவது வாரத்தில் கால் பதித்துள்ளது. ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி, 6 வைல்ட் கார்டு போட்டியாளர்கள், வாரந்தோறும் நடைபெறும் எலிமினேஷன் என்று தற்போது 15 போட்டியாளர்களே மீதமாக எஞ்சி உள்ளார்கள்.இந்த சீசன் முடிவதற்கு இன்னும் 35 தொடக்கம் 40 நாட்கள் தான் உள்ளது. இதனால் ஒவ்வொரு வாரமும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இறுதியாக இடம் பெற்ற எலிமினேஷனில் சச்சனாவும் ஆனந்தியும் வெளியேறி இருந்தார்கள்.இந்த நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து சத்யா வெளியேறி உள்ளதாக தகவல்கள் வைரலாகி உள்ளன. சத்யா பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை சக போட்டியாளர்களுடன் வாதத்தை தவிர்த்தார். இதனால் அவர் பயந்தாங்கோலி என விமர்சிக்கப்பட்டார்.சத்யா தொடர்பில் பல கருத்துக்கள் குவிக்கப்பட்ட போதும் அவர் மோதல்களில் ஈடுபடுவதை தவிர்த்தார். ஒரு வாரம் ஹவுஸ் கேப்டனாக கூட பணியாற்றினார். விஜய் சேதுபதி அவருக்கு பேசுவதற்கு பல வாய்ப்புகளை வழங்கியபோதும் அதனை அமைதியான அணுகு முறையிலேயே கையாண்டார் சத்யா.சமீபத்தில் நடந்த ஏஞ்சல்ஸ் டேவில்ஸ் டாஸ்கின் போது சத்யாவின் தகுதியை கேள்விக்கு உட்படுத்தி அவரை தூண்டமுயன்றார்  முத்துக்குமரன். இதில் சண்டை தீவிரம் அடைந்து இருக்கலாம். ஆனால் சத்யா அதனையும் அமைதியுடனே சமாளித்தார்.இவ்வாறான நிலையில் இன்றைய தினம் சத்யா பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆனது எதிர்பாராத ஒரு சம்பவமாக காணப்படுகின்றது. சத்யாவின் அமைதியான இயல்பும் கன்னியமான நடத்தையும் பல ரசிகர்களை கவர்ந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.   

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன