வணிகம்
ஆன்லைன் பேமென்ட்டின்போது கிரெடிட் கார்டு விவரங்களை பாதுகாக்க வேண்டுமா…? டிப்ஸ் இதோ…

ஆன்லைன் பேமென்ட்டின்போது கிரெடிட் கார்டு விவரங்களை பாதுகாக்க வேண்டுமா…? டிப்ஸ் இதோ…
ஃபிஷ்ஷிங், புல்லிங், ஹேக்கிங் மற்றும் டேட்டா இழப்புகள் போன்றவை நம்முடைய பணத்தை இழக்க செய்வதற்கான சில பாதுகாப்பு அபாயங்களாக அமைகின்றன. எனவே, உங்களுடைய கிரெடிட் கார்டு தகவலை எல்லா நேரங்களிலும் மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். ஆகையால் உங்கள் கிரெடிட் கார்டு விவரங்களை ஆன்லைன் டிரான்ஸாக்ஷன் செய்யும்போது, எப்படி பாதுகாக்கலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஆன்லைன் டிரான்ஸாக்ஷன் செய்யும்போது, நீங்கள் பயன்படுத்தும் வெப்சைட் பாதுகாப்பானதா இல்லையா என்பதை முதலில் சரிபார்ப்பது அவசியம். பொதுவாக பாதுகாக்கப்பட்ட வெப்சைட்டுகளின் URLகள் https:// என்று தொடங்கும். மேலும் URL பாரில் ஒரு பேட்லாக் இருக்கும். இவை அனைத்துமே அது ஒரு பாதுகாப்பான வெப்சைட் என்பதை உறுதிப்படுத்தும் தகவல்கள். எனவே பாதுகாப்பு இல்லாத சைட்டுகளில் உங்களுடைய கார்டு விவரங்களை ஒருபோதும் என்டர் செய்ய வேண்டாம்.
காபி ஷாப் மற்றும் பிற பொது இடங்களில் பயன்படுத்துவதற்கு கிடைக்கும் இலவச வைஃபை மூலமாக பேமெண்ட்களை செலுத்துவது நல்ல யோசனையாக இருக்காது. ஏனெனில் இந்த மாதிரியான இலவச வைஃபை நெட்வொர்க்களை மோசடிக்காரர்கள் மிக எளிதாக ஹேக் செய்து விடுவார்கள். எனினும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பப்ளிக் வைஃபை பயன்படுத்தி பேமெண்ட் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் ஒரு வெர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் மூலமாக பேமெண்ட் செலுத்துவது நல்லது.
டு ஃபேக்டர் ஆதன்டிகேஷன் என்பது உங்களுடைய கிரெடிட் கார்டு மற்றும் ஒட்டுமொத்த சாதனத்தின் பாதுகாப்பை மேம்படுத்தும். ஏனெனில் ஆன்லைனில் நீங்கள் எந்த ஒரு பேமெண்ட் செலுத்தும்போதும், உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் அல்லது இமெயிலுக்கு OTP அனுப்பப்படும். அதனை என்டர் செய்தால் மட்டுமே பேமெண்ட் நிறைவு பெறும்.
கார்டு விவரங்களை பிறருக்கு பகிருதல் உங்களுடைய கிரெடிட் கார்டு விவரங்களை போன், இமெயில் அல்லது சோஷியல் மீடியா மூலமாக பகிர்வது முற்றிலும் தவறு. உங்களுடைய கிரெடிட் கார்டு PIN நம்பர், CVV, OTP போன்றவற்றை இந்த மாதிரியான சேனல்கள் மூலமாக வங்கிகள் ஒருபோதும் கேட்க மாட்டார்கள். ஆகவே இது போன்ற சம்பவங்களை நீங்கள் அனுபவிக்க நேர்ந்தால் உடனடியாக அது குறித்து புகார் அளிப்பது நல்லது.
பிஷ்ஷிங் என்பது இமெயில், மெசேஜ்கள் அல்லது வெப்சைட்டுகள் வடிவத்தில் மக்களை தங்களுடைய தனிப்பட்ட மற்றும் பொருளாதார விவரங்களை பகிர்ந்து கொள்ள செய்யும் யுக்திகளை கொண்டு நடத்தப்படும் ஒரு மோசடி. இந்த மாதிரியான மோசடிகளில் ஹேக்கர்கள் உண்மையான சேவை வழங்குனர்கள் போலவே உள்ள போலியான இமெயில்களை பயன்படுத்துவார்கள். எனவே தெரியாத மூலங்களிலிருந்து அல்லது நபர்களிடமிருந்து வரும் லிங்க் அல்லது அட்டாச்மென்ட்களை அவசரப்பட்டு கிளிக் செய்ய வேண்டாம்.
எனவே, எச்சரிக்கையாக இருப்பதன் மூலமாகவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமாகவும் உங்களுடைய கிரெடிட் கார்டு விவரங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளலாம். எந்த ஒரு அப்ளிகேஷன்களை பயன்படுத்தும்போதும் எச்சரிக்கையாக இருக்கவும். மேலும், உங்களுடைய கிரெடிட் கார்டு விவரங்களை சாதனத்தில் சேமித்து வைப்பதை தவிர்ப்பது நல்லது.