இலங்கை
இந்தியா செல்லும் அனுரகுமார திஸாநாயக்க : சக்திவாய்ந்த அமைச்சர்களை சந்திக்க திட்டம்!

இந்தியா செல்லும் அனுரகுமார திஸாநாயக்க : சக்திவாய்ந்த அமைச்சர்களை சந்திக்க திட்டம்!
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று(15) முதல் 17 ஆம் திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தில் இணைவார்.
அதன்படி, இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் பல சக்திவாய்ந்த அமைச்சர்களுடனும் ஜனாதிபதி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.
ஜனாதிபதி தனது விஜயத்தின் போது, புதுடெல்லியில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான வர்த்தக திட்டத்தில் இணைந்து கொள்வதோடு புத்த கயாவிற்கும் விஜயம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதியின் இந்தியப் பயணம் குறித்த அறிவிப்பில், பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இலங்கைக்கு மிக நெருக்கமான அண்டை நாடாக இலங்கை முன்னுரிமை அளிக்கப்படுவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் திரு.ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் வெளிவிவகார மற்றும் சுற்றுலா அமைச்சர் திரு.விஜித ஹேரத் ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ள உள்ளனர்.