தொழில்நுட்பம்
ஏ.டி.எம் கார்டு வேண்டாம்.. ஆதார் பயன்படுத்தி யு.பி.ஐ பின் மாற்றலாம்; எப்படி?

ஏ.டி.எம் கார்டு வேண்டாம்.. ஆதார் பயன்படுத்தி யு.பி.ஐ பின் மாற்றலாம்; எப்படி?
யு.பி.ஐ பின் நம்பர் மாற்ற ஏ.டி.எம் கார்டு தேவைப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆதார் அட்டை பயன்படுத்தி அதை மாற்றலாம். ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு மூலம் இதை செய்யலாம். நாடு முழுவதும் தற்போது யு.பி.ஐ பரிவர்த்தனைகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் பயன்படுத்தி யு.பி.ஐ பரிவர்த்தனைகளை எளிதாக செய்ய முடியும். அந்த வகையில் யு.பி.ஐ பின் நம்பர் மறந்து விட்டீர்கள் என்றால் அல்லது அதை மாற்ற வேண்டும் என்றால் ஆதார் கார்டு எண் வைத்தே எளிதாக செய்யலாம். முன்னதாக இதற்கு ஏ.டி.எம் கார்டு தேவைப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆதார் அட்டை பயன்படுத்தியே செய்யலாம்.