Connect with us

இந்தியா

ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Published

on

ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Loading

ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மக்களவை, மாநில சட்டமன்றங்கள் மற்றும் நகராட்சி உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் சட்ட மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.

Advertisement

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழுவை மத்திய அரசு அமைத்தது.

இந்தக் குழு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து கடந்த செப்டம்பர் மாதம் அறிக்கை அளித்த நிலையில் அதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Also Read :
“சாதிய பாகுபாடுகளை களைய சட்டத்தைவிட மக்களின் மனமாற்றமே அவசியம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Advertisement

ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது அதானி விவகாரத்தை திசைதிருப்பும் முயற்சி என விசிக எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் நியூஸ் 18 தமிழ்நாடுக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், அதிபர் ஆட்சி முறையை ஏற்படுத்த பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்-சும் முயற்சிப்பதாக சாடினார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் முறை மக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார். டெல்லியில் நியூஸ் 18 தமிழ்நாடுக்கு பேட்டியளித்த அவர், உள்ளூர் பிரச்னைகளை பேசக் கூடாது என்பதற்காகவே இந்த முறையை பாஜக கொண்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன