இலங்கை
சடலத்தை மறைத்து வைத்திருந்த இருவர் கைது!

சடலத்தை மறைத்து வைத்திருந்த இருவர் கைது!
மாத்தறை – வல்யிங்குருகெட்டிய பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபரின் சடலத்தை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விலங்குகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படும் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்த நபரின் சடலத்தையே இவர்கள் மறைக்க முயன்றுள்ளனர்.
இதன்படி, மின்சார வேலியைப் பொருத்திய 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாம் பொருத்திய மின்சார வேலியில் சிக்கி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 58 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.