Connect with us

இந்தியா

“சட்டமன்றத்தில் நான் பேசுவதை காட்டியிருந்தால் இந்த ஆட்சியே இருந்திருக்காது” – எடப்பாடி பழனிசாமி அதிரடி

Published

on

“சட்டமன்றத்தில் நான் பேசுவதை காட்டியிருந்தால் இந்த ஆட்சியே இருந்திருக்காது” - எடப்பாடி பழனிசாமி அதிரடி

Loading

“சட்டமன்றத்தில் நான் பேசுவதை காட்டியிருந்தால் இந்த ஆட்சியே இருந்திருக்காது” – எடப்பாடி பழனிசாமி அதிரடி

தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (15ம் தேதி) நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “என்ன திட்டத்தை நிறைவேற்றினோம் என்பதை வெள்ளை அறிக்கை விடுங்கள் அப்படி கேட்டால். கிண்டலும் கேலியும் பேசுகிறார்கள். இதற்கான பதிலை 2026 ஆம் ஆண்டு தேர்தலில் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

Advertisement

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால் அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம், விவசாயிகள் போராட்டம், ஆசிரியர்கள் மருத்துவர்கள் போராட்டம், இப்படி 1 ஆண்டுகளில் திமுக போராட்டங்களை சந்தித்து வருகிறது.

அதிமுக ஆட்சியில் ஒரு கிலோ பொன்னி அரிசி 55 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் இன்று 75 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பால் விலை உயர்வு, மின்கட்டணம் 52% உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 6% உயர்த்தப்படுகிறது. வீட்டு வரி 100 சதவீதம் உயர்வு, கடை வரி உயர்வு, கட்டுமான பொருட்கள் பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, 43 மாத கால ஆட்சியில் இதை உயர்த்தியதுதான் சாதனை.

டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் விஞ்ஞான முறையில் முறைகேடு ஊழல். ஒரு நாளைக்கு ஒரு கோடி பாட்டில் விற்கப்படுகிறது. ஒரு நாளைக்கு பத்து கோடி ரூபாய் மதுபானத்தில் இருந்து மட்டும், திமுக அரசாங்கத்திலிருந்து அதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு சென்று கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு 10 கோடி, ஒரு மாசத்துக்கு 300 கோடி ஒரு ஆண்டுக்கு, ஆண்டுக்கு 3,600 கோடி இது மிகப்பெரிய ஊழல். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், 100 நாள் சட்டப்பேரவை நடக்கும் என்று சொன்னார்கள். இந்த 43 மாத கால ஆட்சியில் 400 நாட்கள் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், 113 நாள் தான் பேரவை நடந்துள்ளது.

Advertisement

மழைக்கால கூட்டத்தொடர் 2 நாளில் நடத்தி முடித்து இருக்கிறார்கள். இதுபோல வரலாறு படைத்ததும் திமுக அரசாங்கம் தான். அதிலும் ஒரு நாள் தான் பேச வைத்தார்கள் அதிலும் ஒருவருக்கு தான் பேச வாய்ப்பு கிடைத்தது. அந்த ஒருவர் பேசியதற்கு கூட 10 நிமிடம் தான் வைத்துக் கொண்டார்கள். அதிமுகவை பார்த்து, ஆளுகின்ற கட்சிக்கு பயம் வந்துவிட்டது.

43 மாத கால ஆட்சியில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. சட்டப்பேரவை நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று சொன்னார்கள். அது பேசிக்கொண்டே இருப்பார்கள், தேர்தல் அறிக்கைகளும் சொன்னார்கள். ஆனால், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் நான் பேசிக் கொண்டிருக்கும் பொழுது நேரலையை துண்டித்து விடுவார்கள். நான் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்வார் அது ஒளிபரப்பாகும். நான் என்ன கேள்வி கேட்டேன் என மக்களுக்கு எப்படி புரியும். கேட்கின்ற கேள்வியையும் மக்களுக்கு காட்ட வேண்டும். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, சட்டமன்றத்தில் பேசுவதை காட்டுவதே இல்லை.

அண்மையில் டங்ஸ்டன் சுரங்கம் பற்றி சட்டப்பேரவையில் நான் பேசியது ஒளிபரப்பப்பட்டது. அதற்கே ஸ்டாலின் ஆடிப் போய்விட்டார். நான்கு முறை சட்டப்பேரவை நடந்திருக்கிறது. நான்கு முறையும் நான் பேசுவதை முழுவதும் காட்டி இருந்தால் இந்த ஆட்சியே இருந்திருக்காது.

Advertisement

ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும், அடுத்து வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும் என்று இறுமாப்போடு பேசுகிறார். நீங்கள் பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறீர்கள். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம் அந்த கதையாக தான் இருக்கிறது ஸ்டாலின் சொல்வது, உங்கள் கனவு ஒருபோதும் நிறைவேறாது.

அதிமுகவுக்கு எழுச்சி பிறந்துவிட்டது அதுவே எங்களுக்கு வெற்றி. அடுத்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். திமுகவின் குடும்ப உறுப்பினரான கனிமொழியும் திமுக 200 இடங்களை வெல்லும் என இறுமாப்போடு சொல்கிறார். உங்களுக்கு 200 வெல்வதுபோல் கனவு வந்திருக்கும். நீங்கள் சொல்வது அதிமுக கூட்டணிக்கு வேண்டுமானால் பொருந்தும். 2026 தேர்தலில், அதிமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றிபெறும். கனிமொழி, தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு இடங்களில் போய் இறுமாப்போட சொன்னால், அப்பொழுது தெரியும் மக்கள் என்ன கொடுப்பார்கள் என்று.

தமிழகத்தில் இருக்கக்கூடிய அத்தனை துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்குது. சட்டம் சாந்தி சிரிக்குது. முதலிலெல்லாம் தங்கம் விலை நிலவரம் என்ன என்று தெரியும். ஆனால் இன்று கொலை நிலவரம் என்ன என்றுதான் பார்க்க வேண்டி இருக்கிறது. இப்படி அவல ஆட்சி எங்கேயாவது இருக்கிறதா? தமிழகத்தில் தொடர்ந்து கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமை, இதற்கெல்லாம் காரணம் திமுக அரசாங்கம்தான்.

Advertisement

இதையெல்லாம் திமுகவில் இருக்கும் கூட்டணி கட்சிகள் கண்டு கொள்வதுமில்லை, மக்கள் பிரச்சினையை அவர்கள் கேட்பதும் இல்லை. திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பவர்கள் எல்லாம் ஒரே கொள்கை கொண்ட கட்சி என திமுக தலைவர் சொல்கிறார். பிறகு எதற்கு தனி கட்சி வைத்திருக்கிறீர்கள் எல்லாரும் திமுகவில் சேர்த்துவிடலாமே?

அதிமுக கொள்கை அடிப்படையில் செயல்படுகின்றது கூட்டணி என்பது தேர்தல் நேரத்தை பொறுத்தது. ஊழலின் ஊற்றுக்கண் திமுக; ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி இந்தியாவில் திமுக ஆட்சி தான். அடுத்த சாதனை என்னவென்றால் உதயநிதி துணை முதலமைச்சர் ஆக்குவது தான் வேறு எந்த சாதனையும் அவர்கள் செய்யவில்லை –

இந்த ஆட்சியை மக்கள் விரும்பவில்லை. அதனால் தான் வெள்ள பாதிப்பின் போது ஒரு அமைச்சர் மீது விரும்பத்தகாத ஒரு சம்பவம் நடைபெற்றது. பல்வேறு இடங்களில் சட்டமன்ற உறுப்பினர்களையே உள்ளேவிடலை. பல அமைச்சர்களை மக்கள் கேள்வி கேட்கின்ற நிலைக்கு வந்து விட்டார்கள். மக்கள் இந்த ஆட்சியை வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள். எப்பொழுது இந்த ஆட்சி முடிவுக்கு வரும், எப்பொழுது அதிமுக ஆட்சி மலரும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Advertisement

2026ல் நமக்கு பொற்காலம் காத்துக் கொண்டிருக்கிறது. நிச்சயமாக அதிமுக ஆட்சி மலரும். நிச்சயமாக, உறுதியாக, மக்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என அத்தனை பேரும் எதிர்பார்க்கின்ற கூட்டணி அமையும். இப்படித்தான் நான் நாடாளுமன்றத் தேர்தலில் சொன்னேன் என்று நீங்கள் நினைக்கலாம், நாடாளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு இது நம்முடைய தேர்தல்.

இன்று ஆட்சியில் இருப்பவர்கள் அதிகார போதையில் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு வரும் தேர்தலில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும். 2026ல் வரும் ஆட்சி வேறு விதமாக இருக்கும். அது குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இருக்கும். கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் குடும்பமா? மன்னர் ஆட்சியில் தான் மன்னருக்கு பிறகு அவருடைய மகன் வருவார். அப்படித்தான் கருணாநிதி இருந்தார், இப்பொழுது ஸ்டாலின் இருக்கிறார், அடுத்து ஒரு வாரிசை கொண்டு வந்து முடிசூட துடிக்கிறார்கள்.

இன்று திமுகவினரே நொந்து போய் இருக்கிறார்கள். திமுக அமைச்சர்கள் முகத்தில் பிரகாசமே இல்லை. திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது. கருணாநிதி காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்களும் இருக்கிறார்கள், இவரது ஆட்சியிலும் அமைச்சராக இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் முதலமைச்சர் பதவி கிடையாது. கருணாநிதி குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக அவரை எம்எல்ஏ ஆக்கினார்கள். பின்னர் அமைச்சர் ஆக்கினார்கள் இப்பொழுது துணை முதல்வர். கருணாநிதி குடும்பத்தில் பிறந்தால் தான் இத்தனை பதவிகளும் கிடைக்கும் என்ற நிலை வந்துவிட்டது. திமுக கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி ஆகிவிட்டது. குடும்ப உறுப்பினர்கள் தான் ஆட்சி அதிகாரத்தை செலுத்த முடியும். அப்படிப்பட்ட நிலைமை 2026 மாற்றிக் காட்டப்படும்” என்று பேசினார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன