உலகம்
சிரியாவின் புதிய காபந்து அரசாங்கம் பற்றி ஓர் பார்வை

சிரியாவின் புதிய காபந்து அரசாங்கம் பற்றி ஓர் பார்வை
சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சியை அகற்றிய பின்னர், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) தலைவரும், புதிய நிர்வாகத்தின் தளபதியுமான அஹ்மத் அல்-ஷாரா, முகமது அல்-பஷீரை மார்ச் வரை காபந்து அரசாங்கத்தை வழிநடத்த நியமித்துள்ளார்.
பொதுமக்களுக்கு அடிப்படை சேவைகளை வழங்குவதன் மூலமும், அரச வளங்கள் மற்றும் அமைச்சுக்கள் தொடர்பாக ஆயுதக் குழுக்களுக்கிடையில் அதிகாரப் போட்டி ஏற்படுவதைத் தடுப்பதன் மூலமும் நாட்டை ஸ்திரப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள மறுத்தால், காபந்து அரசாங்கம் மற்றும் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் நம்பகத்தன்மையை இழக்க நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
காபந்து அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் யார்?
அல்-பஷீர் , தற்போதைக்கு, சிரிய இரட்சிப்பு அரசாங்கதின் அமைச்சர்கள் தேசிய மந்திரி இலாகாக்களை கைப்பற்றுவார்கள் என்று கூறினார்.