சினிமா
சூர்யா 45வது படத்தில் இணைந்த புதிய நடிகை.! அதகளமாக வெளியான அறிவிப்பு

சூர்யா 45வது படத்தில் இணைந்த புதிய நடிகை.! அதகளமாக வெளியான அறிவிப்பு
நடிகர் சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான கங்குவா திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான போதிலும் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலிலும் சரிவை சந்தித்தது. இந்த நிலையில், ஆர். ஜே பாலாஜி இயக்கும் சூர்யாவின் 45 ஆவது படத்தில் புதிதாக நடிகை ஸ்வஸ்திகா மற்றும் நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் இணைந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.கங்குவா படத்திற்கு பிறகு சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் தனது 44வது படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது. இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும்.d_i_aஇதற்கு இடையில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்திலும் சூர்யா நடிக்க உள்ளார். அதற்கான ஆரம்பகட்ட பணிகளும் நடந்து வருகின்றன. இதற்கு இடையில் சூர்யாவின் 45 வது படத்தை ஆர். ஜே பாலாஜி இயக்க உள்ளார் என்ற அறிவிப்பும் வெளியானது.இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளார். சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவுடன் திரிஷா இணைந்து நடக்க உள்ள சந்தோஷமான சம்பவத்தை சமீபத்தில் கேக் வெட்டியும் கொண்டாடியிருந்தார்கள். மேலும் சூர்யாவின் 45 வது திரைப்படத்தில் ரப்பர் பந்து படத்தில் நடித்த சுவாசிக்கா சமீபத்தில் இணைந்தார். இவரை தொடர்ந்து தற்போது நடிகை ஸ்வஸ்திகா மற்றும் நடிகர் இந்திரன்ஸ் ஆகியோரும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.